Reading Time: < 1 minute மெட்ரோ வன்கூவரில் கடுமையான மழை பெய்யக்கூடுமென, கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மெட்ரோ வன்கூவரில் 60 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் 40 முதல் 60 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆறுகள், சிற்றோடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.Read More →

Reading Time: < 1 minute கிழக்கு டவுன்ஷிப்களில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 24 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக கூறியுள்ளனர். புரோம்- மிசிஸ்கோய் பகுதியில் உள்ள களஞ்சிய சாலையை குறிவைத்தே இவர்கள், இதற்கு தீ வைத்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்ததாகவும், இதுதொடர்பானRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மெயின்லேண்டில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெரிடேஜ் டிரைவில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு வெள்ளை எஸ்யூவியில் ஒருவர் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பாதிக்கப்பட்ட 19 வயது யுவதி கூறியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும், எஸ்யூவியிலிருந்து துப்பாக்கிதாரி அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் விசாரணைகள் ஆரம்பRead More →

Reading Time: < 1 minute தென்மேற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார்ட்ஸ்வில்லுக்கு அருகிலுள்ள ஜான்ஸ்டன் லைன் மற்றும் மெக்லீன் லைன் இடையே ஹென்றி வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து சம்பவித்தது. இந்த விபத்தில் ஒரு வாகனமே தொடர்பு பட்டிருப்பதாகவும், இந்த வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விபத்து எவ்வாறு சம்பவித்தது என்பது குறித்து எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minute ஸ்கார்பாரோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரை அடையாளங் கண்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், உயிரிழந்தவர் 26வயதான கோஷின் யூசுப் என பொலிஸார் இனங்கண்டுள்ளனர். எக்ளிண்டன் அவென்யூ கிழக்கின் வடக்கே மெக்கோவன் வீதி மற்றும் ட்ரூடெல்லே வீதி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கோஷின் யூசுப் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து தீவிரRead More →

Reading Time: < 1 minute கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் இவ்வாண்டில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தன. இந்த பிரச்சினைகள் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விடயத்தையும் முன்னிறுத்தியிருந்தது. மேலும், குறித்த துறையை ஒழுங்குபடுத்துவதில் பிரச்சினை, பணி நீக்கங்கள், குழாய் இடையூறுகள் மற்றும் கட்டாய உற்பத்தித் தடைகள் வரை பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்நிலையில் இந்த சிக்கல்கள் எதிர்வரும் ஆண்டிலும் தொடரும் எனவும் காலநிலை மாற்றம் குறித்த பரந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர். குறித்தRead More →

Reading Time: < 1 minute மிசிசாகாவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவரும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவின்  கிளென் எரின் டிரைவ் மற்றும் தி கொலேஜ்வே பகுதியில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். மற்றையவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்ற நிலையில், 28 வயதுடைய இளைஞனும் 44 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் முன்னரே பழக்கமானவர்கள்Read More →

Reading Time: < 1 minute லண்டன் பகுதியில் காணாமல்போன இளைஞன் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 29 வயதான கைல் ரெட்ஃபோர்ட் என்பவர், ஸ்பிரிங் பேங்க் டிரைவ் மற்றும் கெர்னோகன் பார்க்வே அருகே டிசம்பர் 23ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இறுதியாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் ஆறு அடி உயரம் கொண்ட இவர், மெல்லிய உடலமைப்பு, குறுகிய மூடி கொண்ட வெள்ளை நிற ஆண் என பொலிஸார் விபரித்துள்ளனர். இவர்Read More →

Reading Time: < 1 minute பொக்ஸிங் டேயன்று (Boxing Day) விண்ட்சரில் சாதனை அளவு வெப்ப நிலை பதிவாகியதாக, கனடா சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் 26ஆம் திகதி விண்ட்சரில் 14.1 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு 13.3 செல்சியஸ் வெப்ப நிலை இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது இந்த வெப்பநிலை முறியடித்துள்ளது. எனினும், ஆண்டு இறுதி வரை வெப்பநிலை இன்னும் இயல்பானதாகRead More →

Reading Time: < 1 minute சர்ரே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் ஒன்றாரியோவை சேர்ந்த 18 வயதான கீஷான் பிரவுன் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். 152 வீதியின் 2200 தொகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை, இரவு 9:30 மணியளவில் குறித்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குறித்த சடலத்தை கண்டுபிடித்த போதே, இது சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்திருந்த பொலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணைRead More →

Reading Time: < 1 minute பிராம்ப்டனில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பியோடிய 58வயதான ஆணொருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். சாண்டல்வுட் பார்க்வே கிழக்கு மற்றும் டோர்ப்ராம் வீதிப் பகுதியில் சன்னி மீடோ பவுல்வர்ட் மற்றும் ரெட் ரிவர் டிரைவ் அருகே நேற்று முன் தினம் (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பிராம்ப்டனை சேர்ந்த 51வயதான ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றிRead More →

Reading Time: < 1 minute சர்ரே பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து, இரண்டு மணித்தியால போராட்டத்திற்கு பிறகு முடிவிற்கு வந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து, சர்ரேயின் பிரிட்ஜ்வியூ பகுதியில் அமைந்துள்ள பழைய வாகன தொழிற்சாலையில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்டது. 1,000 சதுர அடி உலோகத்தால் ஆன கட்டடத்தில் முழுமையாக தீ பரவியதாகவும், 24 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா- லாங்லே பகுதியில் இடம்பெற்ற முதியவர் கொலை தொடர்பாக, மனிதக் கொலை புலனாய்வாளர்கள், விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட 67வயதான முதியவர் டென்னிஸ் ஜான்ஸ்டன் என அதிகாரிகள் அடையாங் கண்டுள்ளனர். ஆரம்பத்தில் இச்சம்பவத்துடன் தொடர்புடையர் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரை பொலிஸ் காவலில் எடுத்ததாகவும், பின்னர் அவரை விடுவித்ததாகவும் ஒருங்கிணைந்த படுகொலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, 224 வீதியின் 2900 தொகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரவுRead More →