Reading Time: < 1 minute கனடாவில் பதிவாகும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக வன்கூவர் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த வெப்பமான காலநிலை காரணமாக அதிகளவில் வயது முதிர்ந்தவர்களே உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (செவ்வாய்க்கிழமை) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் இந்த வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூா்வ தரவுகளின்படி அறிவிக்கப்பட்டதை விட இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் கனடாவில் இதுவரை 26,230 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கனடாவின் ரோயல் சொசைட்டி (Royal Society of Canada) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கோவிட்-19 தொற்றுநோயால் இறந்த கனேடியர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையில் காட்டப்பட்டுள்ளதை விட இருRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 931பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 14ஆயிரத்து 134பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழாயிரத்து 788பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 466பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute வட-கிழக்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்து கனேடிய பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக இவரது நான்கு வயது மகளை விடுவித்ததைத் தொடர்ந்து இப்பெண்ணும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடா உறுதி செய்துள்ளது. முன்னாள் அமெரிக்க தூதரின் உதவியுடன் அந்தப் பெண் சிரிய அல்-ரோஜ் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி இப்போது ஈராக்கின் எர்பில் என்ற இடத்தில் உள்ளார். குர்துகளின் கட்டுப்பாட்டில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 435பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 13ஆயிரத்து 203பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 227பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டாயிரத்து 626பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 512பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute மேற்கு கனடாவில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள்Read More →

Reading Time: < 1 minute உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என கனடா தெரிவித்துள்ளது. பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் திறமையின்மையே மிகப் பெரிய பேரழிவுக்குக் காரணமாக அமைந்ததாக நேற்று வியாழக்கிழமை இது குறித்து கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. 2020 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு விழுத்தியது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 707பேர் பாதிக்கப்பட்டதோடு 16பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 11ஆயிரத்து 634பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 191பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாயிரத்து 349பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 512பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சஸ்கட்செவான் மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மனித புதைக்குழிகளை கண்டுபிடித்துள்ளதாக ‘தி கவொசெஸ் ஒஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ்’ எனும் பூர்வகுடிகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என குறித்த பூர்வகுடிகள் உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடா – சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள ஒரு பழங்குடி சிறுவர்களுக்கான முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் உள்ள புதைகுழியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் வதிவிட பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்போது மற்றொரு வதிவிட பள்ளியில் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 721பேர் பாதிக்கப்பட்டதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து பத்தாயிரத்து 927பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 175பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாயிரத்து 645பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 535பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கக்கூடாது என பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போடுவதால், கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று லெஜர் மற்றும் கனேடிய ஆய்வுகள் சங்கம் நடத்திய இணையக் கணக்கெடுப்புக்கு பதிலளித்தவர்களில் அறுபத்தொன்பது சதவீதம் பேர் கூறுகின்றனர். கனடாவில் 1,542பேரிடம் நடத்திய இணையக் கருத்துக் கணிப்பு ஜூன் 18 முதல் 20 வரை மேற்கொள்ளப்பட்டது. பல கனடியர்கள் குறைவான உடற்பயிற்சி,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு, தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்தால் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இலகுவாக்குவது குறித்த புதிய அறிவிப்புக்களை கனேடியர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார். கனேடியர்கள், கனேடிய நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சில வெளிநாட்டினருக்கான பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளை கனடா நீக்குகிறது. ஜூலை 5 -ஆம் திகதி 11:59 மணிக்குப் பின்னர் தளர்த்தப்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பழங்குடி மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சுயாதீன விசாரணைக்கு பீஜிங் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்க விசாரணை நடத்த சுயாதீனக் குழுக்களை அனுமதிக்க சீனா தயாரா? என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சவால் விடுத்தார். “கனடாவில், இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் குறித்து விசாரிக்க நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைRead More →