Reading Time: < 1 minute
Tamil Business Directory
பொக்ஸிங் டேயன்று (Boxing Day) விண்ட்சரில் சாதனை அளவு வெப்ப நிலை பதிவாகியதாக, கனடா சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் 26ஆம் திகதி விண்ட்சரில் 14.1 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு 13.3 செல்சியஸ் வெப்ப நிலை இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது இந்த வெப்பநிலை முறியடித்துள்ளது.
எனினும், ஆண்டு இறுதி வரை வெப்பநிலை இன்னும் இயல்பானதாக இருக்கும் எனவும் கனடா சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேபோல சர்னியாவிலும் 12 செல்சியஸ் சாதனை வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




