Reading Time: < 1 minute கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில், ஏற்கனவே 26000 நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் போலி நாணயக்குற்றிகள் ஒன்றாரியோவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவில் இந்த நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றிகளே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவிலும் கியூபெக்கிலும் மீட்கப்பட்ட போலி நாணயக் குற்றிகள் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டவைRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது. ஆண்லைன் செய்திப் பிரசுரம் குறித்த கனடிய சட்டத்திற்கு அமைய இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு இவ்வாறு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கால் செயின்ட் ஓன்ஞ் இது பற்றி அறிவித்துள்ளார். கனடாவில் உள்ள ஊடகங்களுக்குRead More →

Reading Time: < 1 minute மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், அதன் எதிரொலியாக உலகளவில் தாமிரத்தின் விலை உயரக்கூடும் என வல்லுனர்கள் தெரிவித்தனர். உலகின் ஒட்டுமொத்த தாமிர உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவு உற்பத்தி செய்யப்பட்டு வந்த சுரங்கத்தை, அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமை ஃபர்ஸ்ட் குவாண்டம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டதை கண்டித்து பனாமா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதோடுRead More →

Reading Time: < 1 minute வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பெரும்பான்மையான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வானது, வீட்டுப் பிரச்சினை உக்கிரமடையச் செய்துள்ளது என கனடியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டுக்குள்; கூடுதலாக குடியேறிகள் வருவதனால் வீடுகள் மற்றும் சுகாதார நலன்கள் என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதாகத் கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் கல்வித்துறையிலும் பாதகRead More →

Reading Time: < 1 minute இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மேற்கு பகுதியில் சீனிக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான மளிகைக் கடைகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் சீனியின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்கு கனடாவின் ரொஜர்ஸ் என்னும் பிரதான சீனி உற்பத்தி நிறுவனத்தில் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் சீனி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சீனி விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனிக்கான தட்டுப்பாடு பேக்கரி மற்றும் இனிப்பு பண்டங்கள் உற்பத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது எதிர்வரும் சிலRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 23ஆம் திகதி, காலை 11.20 மணிக்கு வான்கூவரிலிருந்து புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு கால்கரியை வந்தடைந்த ஏர் கனடா நிறுவனத்தின் விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு தட்டம்மை (measles) என்னும் தொற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, மதியம் 12.45 மணியிலிருந்து 3.15Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் பெருந்தொற்று காலத்தில் இயங்கி வந்த தடுப்பூசி நிலையங்கள் முழுமையாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நான்கு இடங்களில் இவ்வாறு கோவிட்19 தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாகாண அரசாங்கம் வழங்கி வந்த நிதியுதவிகள் நிறைவு பெறுவதாகவும் இதனால் குறித்த தடுப்பூசி நிலையங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நோர்த் யோர்க் சிவிக் சென்டர், கொல்வர்டேல் மோல், மெற்றோ ஹால் மற்றும் ஸ்காப்றோ தடுப்பூ நிலையம் என்பன நிரந்தரமாக மூடப்படுவதாகத்Read More →

Reading Time: < 1 minute இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ், இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் தலைமை தாங்கும் இந்த குழுவில் இலங்கையின் மிகப் பெரிய வெளிநாட்டுக் கடனாளியான சீனாவும் இணைவதற்கு வழி வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, கடந்த ஆண்டு முதல் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்ட முயற்சித்து வருகிறது.Read More →

Reading Time: < 1 minute கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வரும் நிலையில், அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனக்கான மக்கள் செல்வாக்கினை மேம்படுத்தும் நோக்கில் சந்தைப்படுத்தல் உத்திகளை பிரதமர் பின்பற்ற உள்ளார். பிரதமர் ட்ரூடோ, தனது தொடர்பாடல் நிறைவேற்றுப் பணிப்பாளராக பிரபல சந்தைப்படுத்தல் நிபுணரான மெக்ஸ் வலிக்குவாட்டை நியமித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடக்கம் பிரதமரின் தொடர்பாடல் பிரிவிற்கு வலிக்குவாட் பொறுபேற்றுக்கொள்ள உள்ளார். உலகின் முன்னணி சந்தைகளில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பரங்கி அல்லது மூலாம் பழம் உட்கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சல்மொன்னெல்லா எனப்படும் பக்ரீறியா வகையின் தாக்கத்தினால் இந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும் இந்த வகை பக்ரீறியா தாக்கத்தினால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலிசிட்டா (Malichita) மற்றும் ருடி (Rudy) ஆகிய பண்டக் குறிகளின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பெருந்தொகை நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் ரெக்ஸ்டேல் பகுதியில் அண்மையில் இவ்வாறு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சுமார் மூன்று லட்சம் டாலர்கள் பெறுமதியான ஆபரணங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்பியோன் மற்றும் 27ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் ஜன்னலை உடைத்து அதிலிருந்து ஆபரணங்களைக் கொண்ட பைRead More →

Reading Time: < 1 minute கனடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது கனடிய மக்களின் உளச் சுகாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண வீக்கமானது பொருளாதார ரீதியில் மட்டுமின்றி மக்களின் உளவியல் ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எம்என்பி என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. பணRead More →

Reading Time: < 1 minute கனடிய மக்களது ஆயுட் காலம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் மக்களது ஆயுட்காலமானது குறைவடைந்து செல்லும் போக்கினை பதிவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளதுRead More →