Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஸ்கார்பாரோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரை அடையாளங் கண்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், உயிரிழந்தவர் 26வயதான கோஷின் யூசுப் என பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.
எக்ளிண்டன் அவென்யூ கிழக்கின் வடக்கே மெக்கோவன் வீதி மற்றும் ட்ரூடெல்லே வீதி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கோஷின் யூசுப் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டார்.
எனினும், அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சந்தேகநபர குறித்து தகவல் அறிய பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.




