Classifieds

           

ரொரண்டோவில் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 80 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரண்டோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த லாரி ப்ரான்சாக் ( Larry Fronczak) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ரொரண்டோவின் கிபிளிங் அவென்யூ பகுதியில் வசித்த 79-வயதுடைய பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கொலைச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுRead More →

டொராண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொரண்டோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் டொராண்டோவின் ரான்டோல்ப் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரொரண்டோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ரொரண்டோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.Read More →

அனைவருக்கும் அன்பு வணக்கம்! மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் சமூகம் தனக்கான அடையாளங்களை பல வழிகளிலும் இந்த மண்ணில் பதித்து வந்துள்ளது. கல்வி, அரசியல் , வர்த்தகம் தொழில் முனைவுகள், கலை கலாசாரம் என பல தளங்களிலும் தமிழர் நாம் வெற்றியுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் இந்த மண்ணில் எமது இனத்தின் அடையாளத்தை பேணுவதற்கான ஒரு கலாசார நிலையம் இல்லையே என்கின்ற ஏக்கம் எம்மில்Read More →

கனடாவின் தேசிய அரசாங்கம் முதல் தடவையாக வீட்டுக் கொள்வனவில் ஈடுபடுபவர்களுக்கான (First Time Home Buyers) விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. நேற்றைய தினம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கனடாவில் முதல் தடவையாக வீடு ஒன்றை கொள்வனவு செய்பவர்களுக்கு 10வீதம் வரையிலான வட்டியற்ற கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 1.25 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வருமானமாக வருடம்Read More →

கனடாவில், 30 ஆயிரத்துக்கும் குறைவான வருமானத்தை பெறுவோரில், ஆண்களை விட பெண்கள் 12 சதவீதம் அதிகமாக உள்ளதாக, ADP Canada வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. குறித்த ஆய்வில் பங்கெடுத்தோரில், இவ்வாறான குறைந்த வருமானமுள்ள ஆண்கள் 14 வீதமாகவும், பெண்கள் 26 விதமாகவும் உள்ளனர். அத்துடன், ஒட்டுமொத்த கனடியர்களில், ஆண்களை விட பெண்களின் சராசரி ஆண்டு வருமானமும், கிட்டத்தட்ட 17 ஆயிரம் டொலர்கள் குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சராசரிRead More →

ஆமடேல் பொதுப்பாடசாலையில் (Armadale Public School) இருந்து நேற்று மாலை பாடசாலை ஆசிரியர்கள் மாலை 3 மணி அளவில் பொலிசாரை அழைத்திருந்தனர். பாடசாலையில் இருந்த 5 வயது சிறுமியை அவரது தந்தையார் கடத்தி சென்றதாக அங்கு தெரிவிக்கப்பட்ட பின்பு உடனடியாக யோர்க் பிராந்திய பொலிசார் ஓர் அவசர எச்சரிக்கை (Amber Alert) ஒன்றை விடுத்தனர். பாடசாலையில இருந்து சிறுமியை அழைத்து சென்ற அவரது தந்தையார் சிறிய ரக மினிவான் டக்சியில்Read More →

கடந்த திங்களன்று புறேட்வியூ ரி.ரி.சி நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பொதி காணப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் பரிசோதனைக்காக ரி.ரி.சி சேவைகளை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இடைநிறுத்தியது. கைப்பற்றப்பட்ட பொதியில் எந்தத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் காணப்படவில்லை என்றாலும், அதனை வேண்டுமென்றே யாரோ அங்கேயே விட்டுவிட்டதாக பொலிசார் சந்தேகப்பட்டார்கள். அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளில் ரொறன்ரோவை சோந்த 53 வயதான கமல் பத்ரி, என்பவரை கைது செய்துள்ளனர், இவர் பொது இடத்தில்Read More →

அல்பேர்ட்டா முதல்வர் ரேச்சல் நோட்லே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ம் திகதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கல்கரியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சிகளை கடுமையாகச் சாடி தனது உரையை ஆற்றினார். அத்தோடு அங்கு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த முதல்வர், அவர்கள் எழுப்பிய காரசாரமான கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Read More →

63 சதவீத மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு, ஒன்ராறியோவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலுள்ள சுமார் 160,000 மாணவர்களிடையே முன்னெக்கப்பட்டுள்ளது. இதில், 63 சதவீத மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் அனுபவித்திருப்பது தெரியவந்துள்ளது. குறித்த மாணவர்களிடம் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டதில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.Read More →

சர்ச்சைக்குரிய போயிங் 737 மக்ஸ் 8 ரக விமானங்கள், குறைந்தது ஜூலை மாதம் முதலாம் திகதிவரை மட்டுமாவது தடை செய்யப்பட்டிருக்கும் என, எயார் கனடா அறிவித்துள்ளது. குறித்த வகை விமானம், கடந்த 5 மாதங்களில் 2 தடவைகள் விபத்துக்குள்ளாகி பாரிய உயிரிழப்புக்களை உண்டாக்கியிருந்தன. அதனை அடுத்து, கனடா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அவற்றின் பறப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எயார் கனடா, 24 போயிங் 737 மக்ஸ் 8 விமானங்களைRead More →