Reading Time: < 1 minute

பிராம்ப்டனில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பியோடிய 58வயதான ஆணொருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

சாண்டல்வுட் பார்க்வே கிழக்கு மற்றும் டோர்ப்ராம் வீதிப் பகுதியில் சன்னி மீடோ பவுல்வர்ட் மற்றும் ரெட் ரிவர் டிரைவ் அருகே நேற்று முன் தினம் (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பிராம்ப்டனை சேர்ந்த 51வயதான ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற குறித்த 58வயதான சாரதியை, பொலிஸார் சி.சீ.ரி.வி காணொளி பதிவுகளை வைத்து கைது செய்தனர். இவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.