நேற்று இரவு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 11 வயது சிறுமி ஒருவர், தேடுதல் அறிவிப்பு வெளியாகி சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரம்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து (Basement Appartment) சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ரொரன்ரோவில் இருந்து வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாடி வீடு ஒன்றின் கீழ் தளத்தில் இருந்து ரியா ராஜ்குமார்Read More →

கனடாவில் தொடர் கொலையாளி புரூஸ் மக் ஆர்தரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களான கிருஷ்ணகுமார் கனகரத்னம், ஸ்கந்தராஜ் நவரத்னம் உள்ளிட்ட எட்டுபேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமாலை இடம்பெற்றது. ரொறன்ரோவிலுள்ள மெற்றோ பொலிற்ரன் கொம்மியூனிட்டி தேவாலயத்தில் நேற்று மாலை (சனிக்கிழமை) இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஓரினச்சேர்க்கையாளனான மக் ஆர்தருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நினைவு நிகழ்வில் உயிரிழந்தவர்கள்Read More →

கனடா மாணவி சோபியா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சோபியா. இவர் கனடாவில் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் 3-9-2018 அன்று பயணம் செய்த சோபியா, அதே விமானத்தில் பயணம் செய்த தமிழக பாஜகRead More →

நேற்று அதிகாலை 2 மணியளவில் (Feb 07, 2019; 2 AM) Finch Avenue & Middlefield Road சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள GTA Square Mallலில் முகங்களை மறைத்தவாறு கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு திருடர்கள் அங்காடித்தொகுதியில் அமைந்துள்ள Ineeka Jewellery & Gift மற்றும் MJ’s Gold House ஆகிய கடைகளின் கண்ணாடிகளை உடைத்து உட்சென்று பல பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.Read More →

யாழ்ப்பாணத்தில் கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து, நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவித்த சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார், இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைகள்Read More →

டொரோண்டோவின் தொடர் கொலையாளி Bruce McArthurக்கு, 25 ஆண்டுகளின் பின்னரே பிணைக்கு விண்ணப்பிக்க முடியும் எனும் உத்தரவோடு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஈழத்தமிழர்கள் உள்ளடங்கலாக, 8 பேரை படுகொலை செய்த Bruce McArthur, அக்கொலை குற்றச்சாட்டுக்களை கடந்த வாரம் நீதிமன்றில் ஒப்புக்கொண்டிருந்தார். அவை பற்றிய விரிவான விபரங்கள் நீதிமன்றத்தால் கேட்டறியப்பட்டு வந்த நிலையில், இன்றையதினம் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் மரணதண்டனை இல்லை என்பதும், கொலைகளுக்குRead More →

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கனடாத் தேர்தல் ஆணையத்தின் ஊடகச் சந்திப்பும் பொதுமக்கள் கலந்துரையாடலும். நாள் : February 10thநேரம் : 10:00 – 12:00இடம்: JC Banquet Hall, 1686 Ellesmere Rd, Scarborough M1H2V5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான தேர்தல் 2019 ஏப்ரல் 27ம் நாள் நடைபெறும், இதர விபரங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 10ம் திகதி அறிவிக்கப்பட இருக்கின்றது. தலைமைத் தேர்தல்Read More →

யோர்க் பிராந்தியத்தில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம், தமிழர்கள் உட்பட 21 பேர், மதுபோதையுடன் வாகனமோட்டிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் வாகன சாரதி ஒருவர் Tim Hortons உணவகம் ஒன்றின் Drive thruவில் அளவுக்கதிக மதுபோதையில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றதால், வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அவரை வெளியே எடுக்க வேண்டி நேர்ந்த ஒரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 304 கிழக்கு வெலிங்டன் வீதி அரோராவிற்கு மாலைRead More →

ரயசன் (Ryerson) மாணவர் சங்க தலைவர்கள், மாணவர் ஒன்றிய கடனட்டையில் இருந்து $273,000 டாலர்களை சங்க தேவைகளுக்கு அப்பால் பாவித்திருப்பது பற்றிய குற்றச்சாட்டில் மாணவ சங்க தலைவர் ராம் கணேஷ் (Ramganesh Ragupathy) வகிக்கும் மாணவத்தலைவர் பதவியை விட்டு அவரை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாணவர்களிடமும் இருந்தும் எழுந்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் முதல் பொறுப்பில் இருக்கும் புதிய மாணவர் அணியே, இந்த $273,000 டொலர்களை மாணவர்Read More →

அமெரிக்க பத்திரிகையாளர் மேரி கொல்வின் கடந்த 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டமைக்கு சிரிய அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டுமென அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிரியாவின் மேற்கு நகரான ஹோம்ஸில் இருந்து மேரி கொல்வின் செயற்பட்டு வந்த நிலையில், அவர் பணியாற்றிய தற்காலிய ஊடக மையம் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் பிரான்ஸ் ஔிப்படப்பிடிப்பாளர் ரெமி ஒச்லிக் (வயது 28) என்பவரும் உயிரிழந்தார். அத்துடன், தற்காலிகRead More →