சனநாயகத்தில் பல அலகுகளைக் கருத்தில் கொண்டு அவற்றில் நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆராய்ந்து அது குறித்த ஆய்வறிக்கை ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுவது வழமை. இதில் பத்து விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும் அவற்றுக்குள் 60 விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 0 முதல் 10 வரையிலான புள்ளிகள் அடிப்படையில் அவை வரிசைப்படுத்தப்படும். சனநாயக நடைமுறைகளில் சிறப்பாக செயற்படுகின்ற நாடுகள் என ஒரு முதற்பகுதியினரும் குறைபாடுடைய சனநாயக முறைமை என அடுத்துவரும் நாடுகளும் கலப்புமுறைRead More →

கனடாவில் கைது செய்யப்பட்ட ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாக அதிகாரியை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவின் சரணடைதல் ஒப்பந்தத்தை அமெரிக்காவும், கனடாவும் மீறியுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சு குற்றம் சாட்டியது. இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்துள்ளது. இதேவேளை, சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துவதற்கான கனடாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பரஸ்பர முயற்சியை பாராட்டுவதாகவும் நீதித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இவ்விகாரம்Read More →

IBC தமிழ் ஊடகக் குழுமம் தனது பயணத்தின் ஒரு அங்கமாக, கனடா டொரன்டோவில் IBC தமிழா 2019 எனும் ஒரு மேடை நிகழ்ச்சியை இவ்வாண்டு ஜூன் 29ம் திகதி ஏற்பாடு செய்துள்ளது. 1000 எமது தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி தமிழையும், தமிழின் பெருமையையும், தமிழரின் கலைகளையும் அடுத்த தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக ‘ IBC தமிழா – டொரன்டோ 2019’ வடிவமைக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்திலுள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடாவின் டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  மிகச்சரியாக அது என்ன விதமான ரேடியோ அலைகள் என்பதோ, எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை. 13 ரேடியோ வேக அதிர்வுகளில் (Fast Radio Bursts) ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்துRead More →

அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார். கணவனுக்கு இருபது வயது என்றார். கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்` லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது. இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன், ` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க,Read More →

புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றைய (04) தினம் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையேயான விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது. ஐப்பசி 26-க்கு பின்னர் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலையில் போராளிகளது தற்போதைய பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலை தொடர்பில் கரிசனையுடன் உயர் ஸ்தானிகரால் கேட்டறியப்பட்டது. தமிழர்களது பொருளாதார மேம்பாடு கனேடிய தமிழர்களது தாயகமக்கள் நலச்செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. தாயகத்தில் உள்ளRead More →

அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் அவர்கள் இன்று (Nov 30, 2018) தனது 94 வது வயதில் காலமானார். இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் வாக்கர் புஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர் ஜார்ஜ்Read More →

அனைத்து பழைய மாணவர் சங்கங்களுக்கும் அன்பார்ந்த வேண்டுகோள், எமது பாடசாலையின் பெயரிலோ அல்லது பாடசாலையின் பெயரில் இயங்கும் சங்கங்களின் பெயரிலோ நடைபெறும் நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள், மற்றும் ஏனைய நிகழ்வுகளில் அசைவ மற்றும் மதுபான பாவனைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன். இதன்மூலம் எமது பாடசாலையின் சமய மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதுடன் அடுத்த தலைமுறைக்கும் ஊடுகடத்த உதவியாக இருக்கும். பாடசாலையில், யாழில் போதைவஸ்து, மதுபாவனை அதிகரிப்பும் அதன் தவிர்ப்பையும் பற்றிRead More →

வெளிநாடுளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அவர்களை கைவிட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் மிகவும் அதிகளவு நடந்து வருகின்றன. இந்தியாவில் மனைவியை விட்டு விட்டு அவர்களை விவாகரத்து செய்யாமல் தாங்கள் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் அவர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இந்த விவரம் தெரியாமல் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழித்துவிடும் சூழல் உள்ளது.Read More →

இலங்கையின் பிரபல உடுக்கு கலைஞன், யாழ் – பொலிகண்டி, வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று (28-11-2018, புதன்கிழமை) காலமானார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமிய கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு அடித்தல், சுருள் வாள், மடு, தீப்பந்த விளையாட்டுக்கள் மற்றும் கூத்துக் கலை போன்ற கிராமியக்கலைகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தRead More →