Reading Time: < 1 minute இரகசிய முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் (கிளியர்வியூ ஏஐ) ஹாமில்டன் பொலிஸார் அணுகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துணைத் தலைவர் பிராங்க் பெர்கனால் சர்ச்சைக்குரிய இந்த தொழில்நுட்பத்தை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாமில்டன் பொலிஸ் சேவை கிளியர்வியூ ஏஐக்கான உள்நுழைவு சான்றுகளை ஒரு சோதனைக் காலத்தின் ஒரு பகுதியாக வழங்கியுள்ளது என்று சேவையின் தகவல் சுதந்திரக் கிளையிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை எந்தவொரு புலனாய்வு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தவில்லை என்றுRead More →

Reading Time: < 1 minute எட்மண்டனில் இருவர் 100 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 25 வயதான ஆண் ஒருவரும், 22 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இதில் 25 வயது இளைஞன் 51 குற்றச்சாட்டுகளையும், 22 வயது பெண் 49 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்து குற்றச்சாட்டுகளும் உடைத்தல் மற்றும் அத்துமீறி நுழையும் குற்றங்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நிலத்தடி பார்க்கிங் வாகன திருத்தும் இடங்களில்Read More →

Reading Time: < 1 minute மானிட்டோபாவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக, சமீபத்திய இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பெறப்பட்ட அறிக்கையின்படி, இந்த காய்ச்சல் பருவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சேகரித்த தரவுகளைச் சேர்த்த மிக சமீபத்திய அறிக்கையில், இன்ஃப்ளூயன்ஸா ஏ 74 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி 22, 96 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.Read More →

Reading Time: < 1 minute மனிடோபாவில் செயின்ட் போனிஃபேஸ் உதிரிப்பாக கடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். புரோவெஞ்சர் பவுல்வர்ட் மற்றும் செயின்ட் ஜோசப் வீதியின் மூலையில் உள்ள ஒரு உதிரிப்பாக கடையிலேயே நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள ஐந்து குடியிருப்பாளர்களும், சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒருவருமே இவ்வாறு தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் காயங்களின் தன்மை குறித்து தெளிவானRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறாவதாக ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரேசர் ஹெல்த் பிராந்தியத்தில் வசிக்கும் 30 வயதான ஒரு பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் ஈரானுக்கான பயணத்திலிருந்து திரும்பி வந்த நிலையிலேயே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் ஈரானுக்கு மட்டுமே விஜயம்Read More →

Reading Time: < 1 minute கல்கரியின் பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றை விரிவாக்க நிதியளிப்பதாக அல்பர்ட்டா அரசு தெரிவித்துள்ளது. 1988ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பீட்டர் லூகீட் மருத்துவமனை அதன் அவசர அறையை விரிவுபடுத்துவதற்கும் மேலும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் 137 மில்லியன் டொலர்களைப் பெற உள்ளது. இதுகுறித்து தலைமை நிர்வாகி ஜேசன் கென்னி கூறுகையில், ‘மருத்துவமனை கட்டப்பட்டதிலிருந்து கல்கரியின் மக்கள் தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது, அதைப் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த மருத்துவமனையில்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர். முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மாகாண சுகாதார அதிகாரி போனி ஹென்றி கூறுகிறார். தற்போது மூன்று பேருக்கு கொரோனா வைரஸிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதுதவிர, மாகாணத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கான எந்த அறிகுறியும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், விமான நிலையத்தின் அருகில் சிறிய ரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொன்றியலின் (Montreal) மேற்கும் பகுதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. Cessna-150 என்ற இரண்டு இருக்கைகளைக் கொண்ட சிறிய ரக விமானம் அங்கிருந்த விமான நிலையம் அருகில் பறந்துசென்றபோது திடீரென கீழே விழுந்து நொருங்கியது. இதில் விமானத்தில் இருந்த 20Read More →

Reading Time: < 1 minute பிராண்ட்ஃபோர்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, கனடா முழுவதும் கைது உத்தரவு கொண்டுள்ள நிலையான முகவரி இல்லாத 32 வயதான ஜேமி ட்ரைடன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஹாமில்டனில் உள்ள அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு பெண்ணை கேடயமாகப் பயன்படுத்தியதாகவும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிகவும் ஆபத்தானவர் என கருதப்பட்ட இவர், இரண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது. லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது. இந்த அபரீதRead More →

Reading Time: < 1 minute கடந்த இலையுதிர்காலத்தில் கேம்ரோஸ் அருகே இடம்பெற்ற சிறிய தனியார் விமான விபத்து குறித்து, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை (டி.எஸ்.பி.) அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த விமானம் ஸ்தம்பித்து மின் இணைப்புகளைத் தாக்கியதாக, போக்குவரத்து பாதுகாப்பு சபை (டி.எஸ்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், ‘என்ஜின், ப்ரொபல்லர் மற்றும் விமானக் கருவிகளின் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன, அவை இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் எந்த தோல்விகளையும் காட்டவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute லண்டன் நகரின் கிழக்கு முனையில் பிரான்சிஸ் வீதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 60 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு லண்டன் பகுதியிலுள்ள 1031 ஃபிரான்சஸ் செயின்ட் வீதியிலுள்ள சொந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை காலை 9:47 மணியளவில், குறித்த வீட்டில் தீ பரவியதாக லண்டன் தீயணைப்புத் துறை படைப்பிரிவுக்கு அவசர அழைப்புRead More →