Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர். முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் அவர் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மாகாண சுகாதார அதிகாரி போனி ஹென்றி கூறுகிறார்.
தற்போது மூன்று பேருக்கு கொரோனா வைரஸிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர, மாகாணத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கான எந்த அறிகுறியும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.




