Reading Time: < 1 minute

கல்கரியின் பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றை விரிவாக்க நிதியளிப்பதாக அல்பர்ட்டா அரசு தெரிவித்துள்ளது.

1988ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பீட்டர் லூகீட் மருத்துவமனை அதன் அவசர அறையை விரிவுபடுத்துவதற்கும் மேலும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் 137 மில்லியன் டொலர்களைப் பெற உள்ளது.

இதுகுறித்து தலைமை நிர்வாகி ஜேசன் கென்னி கூறுகையில், ‘மருத்துவமனை கட்டப்பட்டதிலிருந்து கல்கரியின் மக்கள் தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது, அதைப் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் ஆண்டுக்கு 80,000 நோயாளிகள் வருகை தருகின்றனர். இது சேவை செய்வதற்காக கட்டப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகம். விரிவாக்கம் நீண்ட கால தாமதமாகும்’ என கூறுகிறார்.

இந்த அபிவிருத்தி திட்டம், எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.