Reading Time: < 1 minute
Tamil Business Directory
கடந்த இலையுதிர்காலத்தில் கேம்ரோஸ் அருகே இடம்பெற்ற சிறிய தனியார் விமான விபத்து குறித்து, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை (டி.எஸ்.பி.) அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் ஸ்தம்பித்து மின் இணைப்புகளைத் தாக்கியதாக, போக்குவரத்து பாதுகாப்பு சபை (டி.எஸ்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், ‘என்ஜின், ப்ரொபல்லர் மற்றும் விமானக் கருவிகளின் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன, அவை இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் எந்த தோல்விகளையும் காட்டவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைபர் பிஏ 18-150 விமானம், கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




