Reading Time: < 1 minute
Tamil Business Directory
மானிட்டோபாவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக, சமீபத்திய இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பெறப்பட்ட அறிக்கையின்படி, இந்த காய்ச்சல் பருவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சேகரித்த தரவுகளைச் சேர்த்த மிக சமீபத்திய அறிக்கையில், இன்ஃப்ளூயன்ஸா ஏ 74 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி 22, 96 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் இன்ஃப்ளூயன்ஸா ஏ பாதிப்பினால் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
மொத்தமாக காய்ச்சல் காரணமாக 274 பேர் மருத்துவமனை அனுமதிக்கப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 27 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




