அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார். கணவனுக்கு இருபது வயது என்றார். கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்` லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது. இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன், ` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க,Read More →

புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றைய (04) தினம் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையேயான விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது. ஐப்பசி 26-க்கு பின்னர் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலையில் போராளிகளது தற்போதைய பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலை தொடர்பில் கரிசனையுடன் உயர் ஸ்தானிகரால் கேட்டறியப்பட்டது. தமிழர்களது பொருளாதார மேம்பாடு கனேடிய தமிழர்களது தாயகமக்கள் நலச்செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. தாயகத்தில் உள்ளRead More →

கடந்த பல ஆண்டுகளாக கனடாவுக்கான ஸ்ரீலங்கா உதவி தூதுவராக பணியாற்றிய திரு. ஜவ்பர் (Mr. Jauhar,Consul General of Sri Lanka in Toronto) தனது பணிக்காலத்தை நிறைவுசெய்து மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு செல்கின்றார். தமிழர்கள் சார்பில் துணை தூதர் திரு. ஜவ்பர் (Mr. Jauhar) அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வொன்று இன்று இரவு (Dec 03, 2018) மார்க்கம் நகரில் அமைந்துள்ள சௌதேர்ன் அரோமா (Southern Aroma) உணவு விடுதியில் நடைபெற்றது.Read More →

யார்க் பிராந்திய போலீஸ் (YORK REGIONAL POLICE) பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டுனர்களின் குற்றங்களை பொதுமக்கள் பார்வைக்கு விடுவதென கடந்த வருடம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் தமது முதலாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டோர்களது 16 குற்றவாளிகள் பெயர் விபரங்களை யார்க் பிராந்திய போலீசார் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வெளியிட்டுள்ளனர். இன்று முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதற்க்கு முதல் வாரம் போதையில் வாகனமோட்டியோரின் தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும். இதில் கடந்தRead More →

அனைத்து பழைய மாணவர் சங்கங்களுக்கும் அன்பார்ந்த வேண்டுகோள், எமது பாடசாலையின் பெயரிலோ அல்லது பாடசாலையின் பெயரில் இயங்கும் சங்கங்களின் பெயரிலோ நடைபெறும் நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள், மற்றும் ஏனைய நிகழ்வுகளில் அசைவ மற்றும் மதுபான பாவனைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன். இதன்மூலம் எமது பாடசாலையின் சமய மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதுடன் அடுத்த தலைமுறைக்கும் ஊடுகடத்த உதவியாக இருக்கும். பாடசாலையில், யாழில் போதைவஸ்து, மதுபாவனை அதிகரிப்பும் அதன் தவிர்ப்பையும் பற்றிRead More →

ரிச்மண்ட் ஹில்லின் நகரத்தில் நடந்த ஒரு பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துஸ்பிரயோக நடந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் விசாரணை நடத்திய யார்க் பிராந்திய பொலிஸ் பிரிவு #2 குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் 22 வயதுடைய டொரோண்டோ தமிழரான பிரசாந் சண்முகவடிவேல் (Pirasan SANMUGAVADIVEL, 22, City of Toronto) மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். புதன்கிழமை, அக்டோபர் 31, 2018 அன்று, ஹாலோவீன் இரவு (Halloween night)Read More →

இலங்கையின் பிரபல உடுக்கு கலைஞன், யாழ் – பொலிகண்டி, வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று (28-11-2018, புதன்கிழமை) காலமானார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமிய கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு அடித்தல், சுருள் வாள், மடு, தீப்பந்த விளையாட்டுக்கள் மற்றும் கூத்துக் கலை போன்ற கிராமியக்கலைகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தRead More →

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரன் சத்தியநாதன் (லெப் சங்கர்) மறைந்த நாளையே மாவீரர் நாளாக தமிழர்கள் உலகளவில் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.  லெப். சங்கர் அவர்கள் மதுரையில் தான் தன் இறுதி முச்சை நிறுத்தினார், ஆதலால், அவர் மதுரையிலேயே விதைக்கப்பட்டிருந்தார் என்பது தமிழக மக்கள் பெருமையோடு நினைவுக்கூற வேண்டிய நிகழ்வு ஆகும்.  இந்நிலையில், முதல் மாவீரனின் நடுகல் பதித்த இடத்தில் பல வருடங்களாக நினைவுகூரல் நடாத்தப்பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது.  ஆனாலும், இந்தRead More →

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் (கார்த்திகை 27) இன்றாகும். உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன எமது மாவீரச் செல்வங்களின் நினைவுநாள் ஆண்டுதோறும் பேரெழுச்சியாக நினைவுகூரப்பட்டு வருகின்றது. கனடா, மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் (Markham Fair Ground) வெளியரங்கத் திடலில் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்போடு, தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்Read More →

கனடா ஈழமுரசு நடாத்திய தமிழீழ தேசியத் தலைவரின் அகவை 64 தலைவன் பிறந்தநாள் தமிழன் நிமிர்ந்த நாள் எழுச்சி விழா 26.11.2018 திங்கள் பிற்பகல் டொரோண்டோ மாநகரில் அமைந்துள்ள மெட்ரோ பொலிட்டன் மண்டபத்தில் (Metropolitan Centre) எழுச்சியுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் “சுதந்திர பறவைகள்” இசைக்குழு வழங்கிய தமிழீழ எழுச்சிப் பாடல்களும், தேசியத்தலைவரின் வாழ்த்துப் பாடல்களும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர்Read More →