Reading Time: < 1 minute

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது..!

துளையிடும் பணி நிறுத்தப்பட்டது??? குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிப்பு!

Tamil Business Directory

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு .

குழந்தை சுஜித் வில்சன் உடல் சிதைந்து காணப்படுவதாக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்து நான்கு நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மீட்புப்பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், இன்று (அக்.,29) அதிகாலை 2.20 மணிக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து அழுகிய வாடை வருகிறது. அவரது கை சிதைந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரது உடலை மீட்க நடவடிக்கை நடந்து வருகிறது. அடுத்த 30 நிமிடத்தில் முறையான அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை, சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.