Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 86000 டொலர்களை இழந்துள்ளார். கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் விசாரணையாளர் என்ற போர்வையில் சிலர், இந்தப் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கு ஊடாக நிதிச் சலவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அஞ்சிரா என்ற பெண்ணே சம்பவத்தில் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். நிதிச் சலவை நடவடிக்கைகளுக்கு வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்Read More →

Reading Time: < 1 minute இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கனடிய அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாகவும், மேற்கு கரையில் வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிராந்திய வலயத்தின் பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண் ஒருவர் கரடி தாக்கி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. புளுபெரி காய்களை பறித்துக் கொண்டிருந்த பெண்ணை கரடி தாக்கி கொன்றதாக முன்னதாக கருதப்பட்டது. எனினும் மரண விசாரணைகளின் போது இந்த பெண்ணை கரடி தாக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணை நாய்கள் தாக்கியுள்ளதாக மரபணு பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 54 வயதான பிங் என்றRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்த காத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் வாடகைத் தொகை மிகவும் அதிகமான பகுதியாக ரொறன்ரோ பெரும்பாக பகுதி உருமாறும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது கனடாவில் மிகவும் வாடகைத் தொகை அதிகமான பகுதியாக வான்கூவர் கருதப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதியளவில் ரொறன்ரோ பெரும்பாக பகுதி மிகவும் வாடகைத் தொகை அதிகமான பகுதியாக மாற்றமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தமக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக மெக்ஸிக்கோவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த தமக்கு மருத்துவமனையொன்றில் பிரசவ சிகிச்சை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்மோன்டனில் அமைந்துள்ள றோயல் அலெக்சான்ட்ரா மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை மறுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 35 வயதான பேர்லா எஸ்ட்ராடா என்ற பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் தமக்குRead More →

Reading Time: < 1 minute கனடா, இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது கடந்த ஆண்டு இந்தியா 41 கனேடிய தூதரக அலுவலர்களை வெளியேற்றியதன் தொடர்ச்சியான நடவடிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் கனேடியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதற்கேற்ப இந்தியRead More →

Reading Time: < 1 minute கனடா மனிடோபாவில் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 31 வயதான கெவின் பிராவுன் என்ற ஆசிரியருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயது மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது. இந்த ஆசிரியர் குறித்த சிறுமியின் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் குறித்த ஆசிரியர் இன்ஸ்டகிராம் ஊடாகவும் குறுஞ்செய்திRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. CIBC வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76 வீதமான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இணைய வழியில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 70 வீதமானவர்கள் வீட்டு விலை அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான பிரதான தடையாக சந்தையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுகின்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து 14.4 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் குபெக் மாகாணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஆசிரியை ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார். சேவைவர் ( Survivor reality TV show ) என்ற ரியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த ஆசிரியை பங்கேற்பதற்காக சென்ற காரணத்தினால் பணி நீக்கப்பட்டுள்ளார். டெபோரா டி பரக்லீர் என்ற ஆசிரியையே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளார். அனுமதியின்றி விடுமுறை பெற்றுக்கொண்டதன் காரணமாக இவ்வாறு குறித்த ஆசிரியை பணி நீக்கப்பட்டுள்ளார். தீவு ஒன்றில் 20 போட்டியாளர்களில் யார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மருந்துப் பொருட்கள் களவாடப்படுவதனை தடுக்கும் நோக்கில் புதிய கருவியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள பல்வேறு மருந்தகங்களில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து களவுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022ம் ஆண்டில் மருந்தகங்களில் மருந்துப் பொருள் கொள்வனவு பாரியளவில் அதிகரித்துள்ளது. போதை தரக்கூடிய மருந்து வகைகளே அதிகளவில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் லித்தியம் அயன் பற்றரி வகைகளை பயன்படுத்துவொருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் (lithium-ion) பற்றரி வகைகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தீயணைப்பு பிரதானிகள் அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரீசார்ஜ் செய்து பயன்படுத்தப்படும் பற்றரி வகைகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் வெகுவாக பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் ரொறன்ரோவில் பற்றரி தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை 90Read More →