Reading Time: < 1 minute

கனடாவில் தமக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக மெக்ஸிக்கோவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த தமக்கு மருத்துவமனையொன்றில் பிரசவ சிகிச்சை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்மோன்டனில் அமைந்துள்ள றோயல் அலெக்சான்ட்ரா மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை மறுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

35 வயதான பேர்லா எஸ்ட்ராடா என்ற பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் தமக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை அளிப்பதற்கு முன்னதாகவே 5000 டொலர்கள் முற்பணமாக செலுத்த வேண்டுமென மருத்துவமனை கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

காப்புறுதி மற்றும் ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு தமக்கு சிகிச்சை வழங்க மருத்துவமனை நிர்வாகம் தயக்கம் காட்டியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பின்னர் தாம் மற்றுமொரு மருத்துவமனைக்கு சென்று சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்ததாக தெரிவித்துள்ளார்.

நண்பர் ஒருவர் உதவி செய்திருக்காவிட்டால் தமது நிலைமை பாரதூரமானதாக அமைந்திருக்கலாம் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.