Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வீட்டு வாடகை 40 வீதத்தினால் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் இவ்வாறு வீட்டு உரிமையாளர்கள் வாடகைத் தொகையை உயர்த்த வேண்டுமென தெரிவித்துள்ளார். வீட்டு வாடகைத் தொகை உயர்த்தப்படாவிட்டால் வீடுகளை விற்பனை செய்ய நேரிடலாம் என தெரிவித்துள்ளனர். வீட்டு உரிமையாளர்களின் இந்த எச்சரிக்கையினால் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வாடகை தொகைகளை உயர்த்த நேரிடுவதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நபர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் அவரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிருடன் இருக்கும் நபர் ஒருவருக்கு, அவர் இறந்து விட்டதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மைக்கல் சகர்ஸ்க்வீ என்ற 67 வயதான நபர் இறந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த நபர் ஓராண்டுக்கு முன்னரே இறந்து விட்டதாக கனடிய அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. ஒன்றாரியோ பேர்த்தில் வாழ்ந்து வரும் நபரே இந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார். எதனால்Read More →

Reading Time: < 1 minute சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பெட்டியொன்றில் பூனையொன்றை கனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். வான்கூவார் ரிச்மன்ட்டின் பிரதான தபால் நிலைய பொதியிடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பெட்டியில் இந்த பூனை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெட்டியிலிருந்து துளையின் ஊடாக கண்களை மட்டும் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் பெட்டியை திறந்த போது அதில் பூனையொன்று உயிருடன் இருப்பதனை அவதானித்துள்ளனர். இந்தப் பூனை ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிருக நலன்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பாடசாலையொன்றுக்கு அருகாமையில் எட்டு வயது சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹால்டனின் புர்லிங்டன் இரண்டாம் நிலை மற்றும் மத்திய பொதுப் பாடசாலைகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுமியை வாகனத்தில் மோதிய நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய சிறுமி ஆரம்பத்தில் சுயநினைவுடன் இருந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute சார்லசை மன்னராக ஏற்றுக்கொள்வது குறித்து கனேடிய மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மகாராணியார் இரண்டாம் எலிச்பெத் மறைந்ததிலிருந்தே மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள் காமன்வெல்த் நாடுகள் பலவற்றில் மேலோங்கத் துவங்கிவிட்டன. நமக்கு மன்னர் எதற்கு, சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராவது நம்மை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறது, அவரை நாம் ஏன் மன்னராக ஏற்றுக்கொள்ளவேண்டும், சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன என்னும் கருத்துக்கள் கனடாவிலும் உருவாகத் துவங்கியுள்ளன. மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியாRead More →

Reading Time: < 1 minute ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் களமிறங்கிய இரு கனேடியர்கள் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரது வீரத்தையும் உக்ரேனிய ராணுவத்தினர் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒன்ராறியோவின் St. Catharines பகுதியை சேர்ந்த 21 வயது Cole Zelenco மற்றும் கல்கரி பகுதியை சேர்ந்த 27 வயது Kyle Porter ஆகியோரே உக்ரைனின் பக்முத் பகுதியில் கொல்லப்பட்டவர்கள். உக்ரைனின் பக்முத் பகுதியில் பல வாரமாக நடந்துவரும் சண்டையில், ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் சிக்கிRead More →

Reading Time: < 1 minute பிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அந்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22)Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் பாலியல் சேவையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்த மறுத்ததாக கூறி ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் டர்ஹாம் பொலிசார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், 32 வயதான ஜனார்த்தனன் சத்தியந்தன் மீது $5,000க்கு கீழ் மூன்று திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று முறை பாலியல் சேவையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்த மறுத்த குற்றத்திற்காகவும் வழக்கு பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் டர்ஹாம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் றொரன்டோவில் பொலிஸார் மதுபானம் களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் கைப்பற்றப்பட்ட மதுபான வகைகளை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் களவாடியுள்ளனர். றொரன்டோவின் 51ம் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. களவாடப்பட்ட இரண்டு போத்தல் மதுபான வகைகளை கைப்பற்றிய போலிஸார், அதனை களவாடிய சந்தேக நபரையும் கைது செய்திருந்தனர். 55 வயதான கொன்ஸ்டபிள் பிரயன் ஜேம்ஸ், 27 கொன்ஸ்டபிள் வயதான தோமஸ் விக்டர் என்றRead More →

Reading Time: < 1 minute அபாயகரமான பொருள் கொண்ட பொதிகள் மாகாணம் முழுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒன்ராறியோ மாகாண காவல்துறை. தொடர்புடைய பொதிகளில் சோடியம் நைட்ரைட் இருப்பதாகவும், தற்கொலை எண்ணம் போன்ற ஆபத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் கூறுகின்றனர். மேலும், அந்த பொதிகளை எதிர்பாராத வகையில் பெற்றவர்கள் அல்லது அப்படியான ஒருவரை தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மாகாணம் முழுவதும் உள்ள பத்துக்கும் மேற்பட்டRead More →

Reading Time: < 1 minute இலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிக் வோல்ஸ், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் விவசாயRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மிகவும் தேடப்பட்டு வருவோர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. றொரன்டோ பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட உள்ளனர். கனடாவில் தேடப்பட்டு வருவோரின் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானவாகள் றொரன்டோவில் தேடப்பட்டு வருவோர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு முதல் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களின் அடிப்படையில் தேடப்பட்டு வருவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.Read More →