Reading Time: < 1 minute கனடாவில் ஆசிரியை வீடோன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மில்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆசிரியை ஒருவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்த வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் பிரவேசித்த இரண்டு சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்Read More →

Reading Time: < 1 minute ரஷ்யா உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில், நாளுக்கு 100 பேர் கனடாவின் கல்கரி விமான நிலையத்தில் வந்திறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை கடந்த 2022 மார்ச் மாதம் தொடங்கி, உக்ரேனிய மக்களுக்கு கல்கரியில் தங்கும் வசதிகள் அளித்துவரும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உக்ரேனியரான Hanna Vakhovska போர் தொடங்கிய பின்னர், உயிருக்கு பயந்து சுமார் 10 நாட்கள் பதுங்கு குழிகளில் தங்கியதாகவும், உயிருடன் அங்கிருந்து வெளியேற முடியுமாRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரெஜினா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பொறியியலாளர் டெனிஸ் ஸ்டெர்லிங் (Denise Stilling) முகக் கவசங்களை மீள் சுழற்சி செய்வது தொடர்பிலான கண்டு பிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்களினால் சுற்றுச்சுழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய கண்டு பிடிப்பு ஒன்றை இந்த பேராசிரியர் மேற்கொண்டுள்ளார். ஒரு தடவை பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் பெரும்பாலும் பொலிபொரப்பலின் எனப்படும் பிளாஸ்டிக் வகைகளைக் கொண்டமைந்துள்ளதுRead More →

Reading Time: < 1 minute ஹாலிபிக்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்த கார் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரந்த நபரின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. விபத்திற்கான காரணங்கள் பற்றிய விபரங்களை பொலிஸார் விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute ரொறன்றோவில் 90 வயதான பாட்டியை கொலை செய்ததாக 34 வயதான பேரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 13ம் திகதி ஒன்றாரியோவின் வோட்டாபோர்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 90 வயதான மார்லென் வில்சன் என்ற மூதாட்டியே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனையின் போது குறித்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டமை தெளிவாகியுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் உக்ரைனிய தாய் ஒருவருக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது ஆறு வயது மகனது விண்ணப்பம் இன்னும் பரிசீலனை செய்யப்படவில்லை. 35 வயதான இர்யானா மிஸ்யானா என்ற பெண்ணுக்கு கனடாவில் தற்காலிக அடிப்படையில் தொழிலில் ஈடுபடுவதற்கும் தங்குவதற்கும் ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மகன் நிகிட்டா என்ற ஆறு வயது சிறுவனுக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்படவில்லை. நிகிட்டா போன்று 279000 உக்ரைனியர்கள் தங்களது ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்கள்Read More →

Reading Time: < 1 minute கனேடிய அரசாங்கம் கடந்த பெப்ரவரியில் டிரக்கர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகால அதிகாரங்களை செயல்படுத்தியது நியாயமானது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 1988 அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான விசாரணைக்கு தலைமை தாங்கிய நீதிபதி பால் ரூலூ, இந்த முடிவை கடுமையான நடவடிக்கை என்று அழைத்தார், ஆனால் சர்வாதிகார நடவடிக்கை அல்ல என தெளிவுப்படுத்தினார். நெருக்கடி காலங்களில் அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களை இந்த சட்டம் வழங்குகிறது. பிரதமர்Read More →

Reading Time: < 1 minute கரீபியன் தேசமான ஹெய்டிக்கு போர்க் கப்பல்களை அனுப்ப கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை, வன்முறை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்டியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட கனடா கடற்படைக் கப்பல்கள் அங்கு விரையவுள்ளன. பஹாமாஸில் நடந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட கரீபியன் வர்த்தகத் தொகுதியான காரிகோம் கூட்டத்தின் போது, பிரதமர் ஜஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எனினும். கனேடிய பிரதமர், எத்தனை கப்பல்கள் இந்த முயற்சியில்Read More →

Reading Time: < 1 minute பெருந்தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு இந்திய புலம்பெயர்வோரை கனடா எல்லை வழியாக அமெரிக்க எல்லைக்குள் கடத்தியதாக, அமெரிக்கப் பொலிசாரிடம் சிக்கிய இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கனடா எல்லையில் குளிரில் உறைந்து இறந்து கிடந்த இந்தியர்கள் சென்ற ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்துRead More →

Reading Time: < 1 minute நயகரா நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் தாய் ஒருவரும், அவரது ஐந்து வயது மகனும் வீழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பள்ளதாக்கில் வீழ்ந்த சம்பவத்தை ஓர் விபத்தாக கருதிவிட முடியாது என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். தாயும் மகனும் பாதுகாப்பு வேலியில் ஏறி பள்ளதாக்கில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பலர் தகவல் வழங்கியுள்ளனர். பள்ளத்தாக்கில் வீழ்ந்த பெண்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வீட்டு விற்பனை தொடர்பிலான மோசடிகள் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிகாரர்கள் வீட்டு உரிமையாளர்கள் போன்று மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ ரியல் எஸ்டேட் பேரவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளை விற்பனை செய்வதாக வீட்டு உரிமையாளர்கள் போன்று தோன்றி மோசடிகாரர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிச் சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீடு விற்பனையாளர்களின் ஆள் அடையாளம் சரியானRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பாடசாலைக்கு எதிரில் மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தரம் 10ல் கல்வி கற்ற மாணவன் ஒருவனே நேற்று (Feb 16, 2023) இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளான். றொரன்டோவின் வெஸ்டன் பகுதியில் பகல் போசன விடுமுறையின் போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவன் பாடசாலையை விட்டு வெளிய வந்ததாகவும், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று மாணவனின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்Read More →

Reading Time: < 1 minute றொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி நாளைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோரி நேற்றைய தினம் மாலை நகர அலுவலரிடம் (City Clerk) தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். எதிர்வரும் 17ம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியுடன் தாம் பதவியை துறப்பதாக டோரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் தம்மை மேயராக ஏற்றுக் கொண்டு மக்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் குடியுரிமை பெற்றுக் கொள்வோர் எண்ணிககையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பிலான விபரங்களை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளும் கனேடிய நிரந்தர வதிவிட உரிமையாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப் பகுதியில் நிரந்தர வதிவிட உரிமை உடையவர்களில் குடியுரிமை பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு குடியுரிமை பெற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டமைக்கானRead More →