Reading Time: < 1 minute 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம். கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சரான Sean Fraser, 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல், விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகள், Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலேRead More →

Reading Time: < 1 minute கனடாவின் சில பாடசாலைகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டொரன்டோ பெரும்பாக பகுதியின் சில பாடசாலைகளில் இவ்வாறு வெளிப்புற செயல்பாடுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்திலும் வட மேற்கு ஒன்றாரியோவிலும் இடம்பெற்று வரும் காட்டுத்தீ சம்பவங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வாரம் முழுவதும் காற்றின் தரம் மோசமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவேRead More →

Reading Time: < 1 minute இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஒரு தம்பதியரை கனடாவுக்கு அனுப்புவதாக லூதியானாவைச் சேர்ந்த ஒரு ஏஜண்ட் ஏமாற்றிவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸைச் சேர்ந்த தியான் சிங் (Dhyan Singh) தன் மனைவியாகிய ஜக்ரூப் கௌர் (Jagroop Kaur) உடன் கனடாவுக்குச் செல்ல விரும்பியிருக்கிறார். அதற்காக, லூதியானாவில், நீரஜ் குமார் (Neeraj Kumar) மற்றும் அவரது மனைவியான பர்வீன் கௌர் (Parveen Kaur) ஆகியோர் நடத்திவந்த பயண ஏஜன்சியை அவர் அணுகியுள்ளார். 2019ஆம்Read More →

Reading Time: < 1 minute போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறுவர் சிறுமியருக்காக கனடிய தம்பதியினர் குதிரை வண்டி சவாரியில் ஈடுபட்டுள்ளனர். கனடாவின் மானிடோபாவைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு இரண்டு வாரங்கள் குதிரை வண்டியில் சவாரி செய்துள்ளனர். உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த குதிரை வண்டி சவாரி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்மன்ட் ஜெரோம் மற்றும் அவரது மனைவி கெல்லி ஆகியோர் இந்த சவாரியை மேற்கொண்டுள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட குதிரை வண்டியைக் கொண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பல்வேறு இடங்களில் நிலவும் காட்டுத் தீ சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் உதவிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கியூபெக் மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் 100 தீயணைப்புப் படைவீரர்களை அனுப்பி வைக்க உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் இந்த விடயம் தொடர்பில் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு தீயணைப்புப் படையினரை அனுப்பி வைப்பது குறித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நன்றி பாராட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும்Read More →

Reading Time: < 1 minute தன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்வாள் என நம்பி, 20 லட்ச ரூபாய் செலவு செய்து, இளம்பெண் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைத்தார் இளைஞர் ஒருவர். ஆனால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கனடா செல்லும் ஆசையில் இருந்துள்ளார். அப்போது, குடும்ப நண்பர் ஒருவர், தனக்குத் IELTS தேர்வெழுதி வெற்றி பெற்ற பெண் ஒருவரைத் தெரியும் என்றும், ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு, அவரை கனடாவுக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் ஐந்து பேர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு காணாமல் போயிருந்த சிறுவர்களில் நான்கு பேரைRead More →

Reading Time: < 1 minute கனடா நாட்டிற்கு படிப்புக்கான விசாவில் சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். கனடாவில் படிப்புக்கான விசாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான பெண் படித்து வந்துள்ளார். இவரது தந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் வேலைக்காக சென்றுள்ளார். பல ஆண்டுகளாக அந்நாட்டிலேயே அவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் உயர்கல்வி பயில்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய அரசாங்கம், இவ்வாறான மோசடிகள் இடம்பெறும் முறைகள் மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள்Read More →

Reading Time: < 1 minute இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ரயில் விபத்தின் காட்சிகளை பார்த்து தன் இதயம் நெருங்கி போய் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரயில் விபத்தின் படங்கள் தனது இதயத்தை உடைத்துவிட்டதாக “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது.Read More →

Reading Time: < 1 minute இலங்கை வழியாக கனடா செல்வதற்காக இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை (1) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவத்தில் கே. ஜோர்ஜ் (65) என்ற இந்தியப் பிரஜையே உயிரிழந்துள்ளார். விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →