Reading Time: < 1 minute மானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து மூன்று பேர் தப்பிச் சென்றதாகவும் அதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாஸ் மற்றும் ப்ளோன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். ஏதேனும் சந்கேதத்திற்கு இடமான விடயத்தை அவதானித்தால் அதனை உடனடியாக பொலிஸாருக்க அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் எட்மோன்டனில் தாய் ஒருவரும் பிள்ளையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 11 வயது பிள்ளை மற்றும் தாய் மீது கொடூர கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 35 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் சுமார் 30000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீ காரணமாக இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இவ்வாறு பெருமளவிலான மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது. உலங்கு வானூர்திகளின் உதவியுடனும், தீயணைப்புப் படையினரின் உதவியுடனும் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தின் வடக்கு பகுதியில் தொடர்ந்தும் கட்டுத்தீ பரவுகை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் மொத்தமாக 108 காட்டுத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் 20 டொலர் நாணயத் தாளில் மன்னார் சார்ள்ஸின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மன்னரின் முடிசூட்டு விழாவின் போது மத்திய அரசாங்கம் இது குறித்து அறிவித்துள்ளது. 20 டொலர் நாணயத்தாளிலும், நாணயக் குற்றிகளிலும் மன்னரின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சமஷ்டி அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த நாணயதாள் வடிவமைப்பு நடவடிக்கைகளின் போது மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டது போன்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவப்படம் பொறிக்கப்படும் என பிரதமர்Read More →

Reading Time: < 1 minute அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்போது பெரும் விவாதத்தில் சிக்கியுள்ள கனேடிய நிறுவனத்திற்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த தாயார் ஒருவர் தமது மகன் இணையமூடாக வாங்கிய பொதியை பயன்படுத்தியதால் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டோனியா ஜோன்ஸ் என்ற அந்த தாயார் தெரிவிக்கையில் தமது மகன் 17 வயதான அந்தோணி ஜோன்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த கனேடிய நிறுவனத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் (Caledon) நகரம் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிக மகிழ்ச்சியான நகரமும், மகிழ்ச்சியற்ற நகரமும் ஒன்றாரியோ மாகாணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெயின்ட்2ஹோம்ஸ் என்னும் ரியல் எஸ்டேட் இணைய தளமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவின் சுமார் நூறு பெரிய நகரங்கள் தொடர்பில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரியல் எஸ்டேட், பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல், அமைவிடம்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகரின் மேயர் பதவி வெற்றிடத்திற்காக கடுமையான போட்டி நிலவும் நிலையில், மேயர் பதவிக்கான கூடுதல் வாய்ப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மெயின்ஸ்ட்ரீட் ரிசர்ச் என்னும் நிறுவனத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் ரொறன்ரோ மேயர் பதவிக்கான பிரகசாமான வாய்ப்பு ஒலிவியோ ச்சோவிற்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 22 வீதமானவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 41000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களில் அதிக எண்ணிக்கையிலானவை பகுதி நேர வேலை வாய்ப்புக்களாகும். கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்புக்களில் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் சுமார் 33000 புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முழு நேர பணிகளில் ஈடுபடுவதற்கு பலரும் விரும்பிய போதிலும்Read More →

Reading Time: 2 minutes கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்ட இந்தியர்கள் குறித்த செய்தி நினைவிருக்கலாம். 30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள் இருவர், என எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாகRead More →

Reading Time: < 1 minute பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு நிகழ்வுகள் தொடர்பில் கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முடிசூட்டு நிகழ்வினை முன்னிட்டு லண்டனில் தங்கியிருக்கும் கனடியர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வாகனங்களில் மோதச் செய்தல் , கத்தி குத்து மற்றும் குண்டுத் தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தல்களை மறுப்பதற்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க கட்டடங்கள், பாடசாலைகள், வழிபாட்டு தலங்கள், விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் விற்கப்பட்ட லொட்டரிக்கு 64 மில்லியன் பரிசு கிடைத்துள்ள நிலையில், அதன் உரிமையாளரை நிர்வாகிகள் தேடி வருகின்றனர். பரிசு அறிவித்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டதாகவும், சமூக ஊடக பக்கத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அட்லாண்டிக் கனடாவில் ஒருவர் லொட்டரியில் வெல்லும் மிகப்பெரிய தொகை இது. 2018ல் ஒருவர் 60 மில்லியன் டொலர் வென்றிருந்தார். தற்போது 64 மில்லியன் டொலர் வென்றுள்ள நபர் இதுவரை தங்களை அணுகவில்லைRead More →

Reading Time: < 1 minute தற்கொலையை ஆதரிக்கும் ஒரு இணைய பக்கம் கனடாவில் பரவலாக பலர் பாவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இணைய பக்கமானது, சமீபத்தில் கைதான மிசிசாகா நபர் கென்னத் லா என்பவரால் தமது தொழிலுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கென்னத் லா மீது தற்கொலைக்கு தூண்டியவர் அல்லது உதவியர் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் நடந்த பல தற்கொலைகளுக்கு குறித்த இணைய பக்கமானது தொடர்பிருப்பதாகRead More →