Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் மென்பானக் கட்டணங்கள் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குளிர்பான வகைகளின் விலைகள் சிறிதளவில் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளிர்பான வகைகளின் கொள்கலன்களை மீள்சுழற்சி செய்வதற்காக கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் மென்பான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, கனடிய மென்பான கொள்கலன் மீள்சுழற்சி நிறுவனம் கட்டணம் அறவீடு செய்ய உள்ளது. இந்தக் கட்டண அறவீட்டுத் தொகையை உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரிடம் அறவீடுRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்று தீப்பற்றிக் கொண்டது. வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் எஞ்சினில் தீப்பற்றிக் கொண்டது. எட்மோன்டனிலிருந்து ரொறன்ரோ திரும்பிய விமானமே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டது. விமானப் பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் எவருக்கும் கயங்கள் ஏற்படவில்லை என பியர்சன் விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்படடதாகRead More →

Reading Time: < 1 minute கனேடிய மக்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க இனி வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்காது என தொடர்புடைய அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இருந்து கனேடிய மக்கள் இணைய மூடாக தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களை பாதுகாப்பான அரசாங்க இணைய பக்கமூடாக தரவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும் குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்தார். புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்Read More →

Reading Time: < 1 minute மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்வினை 7.6 மில்லியன் கனடியர்கள் பார்வையிட்டுள்ளனர். முழு நிகழ்ச்சியை அல்லது நிகழ்ச்சியின் ஓரு பகுதியினை கனடியர்கள் இவ்வாறு நேரலையாக பார்வையிட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இளவரசர் ஹரி மற்றும் மெகனின் திருமண நிகழ்வினை 12 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரித்தானியாவில் முடிசூட்டு நிகழ்வினை 20 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். முடிசூட்டு விழா நிகழ்வில் கனடியRead More →

Reading Time: < 1 minute கனடாவின் டர்ஹாம் பகுதியில் திடீரென்று தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பில் பொலிசார் முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை தொடர்பிலான எண்ணத்தில் இருக்கும் நபர்களை இலக்கு வைத்து மிசிசாகா பகுதியை சேர்ந்த கென்னத் லா என்பவர் சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை விற்பனை செய்துள்ளதை தற்போது டர்ஹாம் பொலிசார் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் 2022ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டவர்கள், சோடியம் நைட்ரைட் வழக்கில் தொடர்புடையவர்கள் என கருதி, வழக்கை விசாரிக்கRead More →

Reading Time: < 1 minute ஒட்டாவா நகருக்கு கிழக்கே குடியிருப்பு ஒன்றில் இருந்து முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் மேலும் இரு பொலிசார் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் போர்கெட் கிராமத்திலேயே தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், லாவல் தெருவில் உள்ள ஒரு வீட்டில்,Read More →

Reading Time: < 1 minute எந்தவொரு தரப்பினதும் மிரட்டல்களுக்கு அச்சம் கொள்ளப் போவதில்லை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடிய ராஜதந்திரி ஜெனீபர் லைன் சீனாவிலிருந்து நாடு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். ஒட்டாவாவில், ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடா மீதும் கனடிய மக்கள் மீதும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதனை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; என அவர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் (leader), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். அதே நேரத்தில் கட்சியில், மற்றொரு தலைமைப் பதவி உள்ளது. அது கட்சியின் President என்னும் பதவியாகும். இந்த President என்னும் கட்சித் தலைவருடைய பணி, கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நிதி திரட்டுதல் மற்றும் நாட்டில் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துதல் முதலானவையாகும். லிபரல் கட்சியின் President என்னும் தலைமைப் பொறுப்பிற்கு, இந்திய வம்சாவளியினரான Sachit MehraRead More →

Reading Time: < 1 minute இலங்கையில் கடந்த 4 மாத காலப் பகுதியில் 113 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது, நான்கு மாத காலப் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் பாலியல் துன்புறுத்தல்கள், வேறும் வகையிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். வெளிநாட்டுப் பெண்களின் பணப்பைகளை பறித்தல், தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டுப் பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண்களை பின்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் றொரன்டோ மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வார இறுதியில் குறித்த நபர் பல பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளதாகவும் ஒரு பெண்ணை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெண் ஒருவரை குறித்த நபர் பின் தொடர்ந்தார் எனவும், குறித்த பெண் கூச்சலிட்டதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குழுமவும் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் வீதியில்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதியில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 4.3 மக்னிடியூட் என்ற அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. முன்னதாக 4.7 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 4.3 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சறுத்தல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மக்களினால் பெரிதாக உணரப்படவில்லைRead More →

Reading Time: < 1 minute சீன ராஜதந்திரி ஒருவரை நாடு கடத்துவதாக கனடா அறிவித்துள்ளது. கனடாவிற்கான சீனத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸாவொ வெய் என்ற சீன ராஜதந்திரியே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சொங் மற்றும் அவரது குடும்பம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மீது சீனா அரசியல் தலையீடுகளை செய்யும் முனைப்புக்களில் இந்த ராஜதந்திரி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டின் சட்டங்களுக்கு ஸாவோ வெய்,Read More →