நிதி குறைப்பு காரணமாக 95 பேரின் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் நிறுத்தப்படுவதாக ரொறன்ரோ கத்தோலிக்க பள்ளி சபை தெரிவித்துள்ளது. மாணவர்கள் கூடுதல் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களைக் குறைப்பதற்கான மாகாணத்தின் முடிவு காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என அச் சபை மேலும் தெரிவித்துள்ளது. இந்த வேலை இழப்பானது 35 பகுதி நேர மாணவர் வகுப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு 60 மணி நேர மேலதிக நிகழ்ச்சிகள் என்பனவற்றில் பாதிப்புRead More →

ரொறன்ரோ பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ருள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 20 மற்றும் 30 வயதுடையவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்தனர். மேலும் 15 மணித்தியாலங்களில் மட்டுமே 4 துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றிருந்ததாகவும் பொலிஸாரின்Read More →

Malvern பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Finch Avenue மற்றும் Tapscott வீதிப் பகுதியில், Crittenden Squareஇல் இன்று அதிகாலை 1.30 (Dec 18, 2018) அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை அடுத்து, அங்கு காவல்துறையினர் விரைந்தனர். சம்வம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்கள், தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே 20 வயது மதிக்கத்தக்கRead More →

சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கனேடிய பிரஜையொருவருக்கு அவுஸ்ரேலியாவில் 8 வருடங்களும் 5 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியுபெக் மாகாணத்தைச் சேர்ந்த அன்ரே தமின் (வயது-65) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு இரண்டு இளம்பெண்களின் துணையுடன் அவுஸ்ரேலியாவுக்கு கப்பல் மூலம் கொக்கெயின் போதைப்பொருள் கடத்தியுள்ளார். சுமார் 100 கிலோகிராம் கொக்கெயின் இவ்வாறு கடத்தப்பட்டதோடு, அவை சுமார் 60 மில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாகRead More →

சவுதி அரேபியாவுக்கு இலகுரக கவச வாகனங்களை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டால், பில்லியன் கணக்கான டொலர்களை அபராதமாக செலுத்தவேண்டி ஏற்படுமென அமெரிக்க கவச வாகன உற்பத்தி நிறுவனமொன்று எச்சரித்துள்ளது. ஒன்றாரியோவை மையமாக கொண்டு இயங்கும் அமெரிக்காவின் கிளை நிறுவனமொன்று இதுகுறித்து குறிப்பிடுகையில், இந்த ஒப்பந்தம் நீக்கப்பட்டால் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவு ஏற்படுமென கூறியுள்ளது. சவுதிக்கு இலகுரக கவச வாகனங்களை ஏற்றுமதி செய்யும் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தைRead More →

ஒன்றாரியோவிலுள்ள ஆரம்ப மற்றும் உயர்நிலை பாடசாலைககளில் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நிதியை அந்த மாநில அரசாங்கம் நிறுத்தியுள்ளது. 25 மில்லியன் டொலர் நிதி இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த நிதி விரயமாக்கப்படுவதாகவும், மிதமிஞ்சிய செலவீனம் என்றும் ஒன்றாரியோ அரசாங்கம் குறிப்பிடுகிறது. எனினும், இச்செயற்பாடு மாணவர்களின் உளவியல் ரீதியான செயற்பாடுகளை பாதிக்கும் என்றும், மேலதிக வகுப்புக்களை நடத்த முடியாமல் போகுமென்றும், தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென்றும் ஒன்றாரியோ அரச பாடசாலைகள் சபை தெரிவித்துள்ளது.Read More →

சவுதி அரேபியாவுடனான பல பில்லியன் டொலர் பெறுமதியான கவச வாகன ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவிற்கு இலகுரக கவச வாகனங்களை விற்பனை செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. எனினும், அதிலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனடாவிற்கும் சவுதிக்கும் இடையிலான இராஜதந்திரRead More →

சீனாவின் ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி கனடாவில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை பிணைப்புகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி செயற்பட்டதாக, ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி மெங் வான்சூ கடந்த முதலாம் திகதி கனடாவில் கைதுசெய்யப்பட்டார். நீண்ட விசாரணையின் பின்னர் கடந்த 11ஆம்Read More →

சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங்கை சீனாவுக்காகன கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம் சந்தித்துள்ளார். அண்மைய நாட்களில் இரண்டு கனேடியர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என குற்றம் சாட்டி சீனாவின் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங்கை சந்திப்பதற்கு சீன அதிகாரிகள் அனுமதி வழங்கிய நிலையில் சீனாவுக்காகன கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம் வெள்ளிக்கிழமை பீஜிங்கில் சந்தித்துள்ளார். கனேடியRead More →

மின்சக்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், அவர்களது போராட்டத்தை தடுக்க ஒன்ராறியோ சட்டமன்றம் நாளை (திங்கட்கிழமை) கூடவுள்ளது. மின் உற்பத்தி தொழிலாளர்கள் 6000 பேர் வரை அடுத்த வாரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், அவர்களது போராட்டத்தால் குறித்த கொண்டாட்டங்களில் பாதிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே மின்சக்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், குறித்தRead More →