ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடுவதற்காக நிர்மானிக்கப்பட்ட, கனேடிய போர்க்கப்பலான HMCS கால்கரி, மேற்கு பசிபிக் பிராந்திய பயிற்சிகளுக்கு பதிலாக ஜப்பானிய மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளுடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. சீனாவின் செல்வாக்கு அதிகம் நிறைந்த இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் நடைபெறும் இந்த பயிற்சி நடவடிக்கையில், வொஷிங்டன் மற்றும் டோக்கியோ நிர்வாகங்களும் பங்களிப்பு செலுத்தியுள்ளன. இந்தநிலையில், தென் சீனக் கடலில் கனடாவின் பிரசன்னம் தொடர்ந்தும் இருக்கும் என்ற கல்கரியின்Read More →

வட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை தளமாக கொண்ட மின்னஞ்சல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மாத்திரம் குறித்த வங்கி மீது போலி மின்னஞ்சல் மூலமான தாக்குதல் முயற்சிகள் 600 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது தனிப்பட்ட தரவுகளைக்Read More →

அமைச்சு பதவியை இராஜினாமா செய்த ஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் உறுதி செய்துள்ளார். அவரது அரசாங்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் நீண்ட நாட்கள் மௌனமாக இருந்த அவர் நேற்று (புதன்கிழமை) இதனை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்ட முதல்வர், போதைப்பொருளில் இருந்து விடுபடும் சிகிச்சை காரணங்களுக்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறியிருந்தார்.Read More →

இராணுவ வீரர் போல் நடித்து நிதி சேகரித்த குற்றத்திற்காக கனடாவின் ஒன்றாரியோவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள கிழக்கு ஒட்டாவாவில் இவர் ஆள்மாறாட்டம் செய்ததாக குறிப்பிடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். 47 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர், தனது சொந்த நிறுவனமொன்றிற்காக இராணுவ வீரரின் உடைகளை அணிந்து பொது மக்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை நிதி வசூலித்துள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.Read More →

கடந்த 1939ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். நாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் முகமாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர். அத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாகRead More →

கனடா ஒன்றாரியோவில் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயில் ஒருவர் உயிரழந்துள்ளார். மேற்கு ஒன்றாரியோவிலுள்ள கிலலொயி ஹகர்டி றிச்சட்ஸ் நகரின் மாஸ்க் வீதியில் நேற்று (புதன்கிழமை) காலை குப்பைமேடொன்றில் தீப்பற்றியுள்ளது. குப்பை மேட்டில் குறித்த தீ உருவான போதிலும், அது அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியுள்ளது. இத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப்படையினர் குப்பை மேட்டுப் பகுதியில் சடலமொன்றை கண்டெடுத்துள்ளனர். எனினும், குறித்த சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,Read More →

கனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சேர்வூட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற குறித்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு மணித்தியாலங்கள் இடைவெளியில் இவ்வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. மாலை 6.30 மணியளவில் முதலாவது வெடிப்புச் சம்பவம் பாதிவாகியதோடு, அதில் காயமடைந்த 21 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இரண்டாவதுRead More →

கியூபெக் நகரத்தின் சுதந்திரத்தின் கனவுக்காக போராடிய முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி 81 வயதில் காலமானார். Parti Quebecois க்கான பொது சேவையில் தனது நான்கு தசாப்தங்களாக வேலை செய்த அவர் முதலில் ஒரு அமைச்சராகவும், பின்னர் கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் இருந்துள்ளார். கடந்த 1976 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அன்று முதல் மக்களுக்கு அளப்பெரிய சேவையாற்றிவந்தார். இவ்வாறு அவரது அரசியல் பயணம் தொடர்ந்து செல்லRead More →

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கனடா அண்மையில் வெளியிட்டது. பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனடாவில் வாழும் சீன பிரஜைகளை கஞ்சா பயன்பாட்டில் இருந்து விலகியிருக்குமாறு சீன அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, கனடாவில் புலம்Read More →

கனடாவில் மர்மப்பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உடனடியாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனடாவின் Edmonton இற்கும் Carlton தெருக்களுக்கும் இடையில் Broadway இல் அமைந்துள்ள அலுவலக கட்டிடம் ஒன்றில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அந்த கட்டிடத்திற்கு விரைந்தனர். உடனடியாக கட்டிடத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர், Broadway இன் ஒரு பகுதி உட்பட சுற்றியுள்ளRead More →