Reading Time: < 1 minute

தனது தாயாரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பிராம்டனை (Brampton) சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரை பொலீசார் கைது செய்துள்ளனர்

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 54 வயதுடைய பெண் ஒருவரின் சம்பவத்துடன் குறிப்பிட்ட நபர் தொடர்புபட்டுள்ளார் என்று கிடைத்த தகவலின் அடிப்படியில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் பொழுது குறிப்பிட பெண்மணியின் மரணம் தொடர்பில் சந்தேகத்துக்கிடமான தடையங்கள் Knightsbridge Road மற்றும் Bramalea Road பகுதியில் கிடைத்தாகவும் பொலீசார் தெரிவித்தனர். மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த கொலை தொடர்பாக 24 வயதுடைய Tyrell Foster என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மேல் முதல் தர குற்றசாட்டு பதிவாகியுள்ளது. கொல்லப்பட்ட 54 வயதுடைய Imebet Foster. சந்தேகநபரின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது