Reading Time: < 1 minute

சர்வதேச பயணிகளின் கட்டாய COVID-19 சோதனை ஒன்ராறியோவில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக COVID-19 மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். வேகமாக பரவிவரும் London UK மாற்று வைரஸ் தொற்று பரவலின் வீரியத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒன்ராரியோ அரசாங்கம் அறிவித்த இந்த செயல்திட்டத்தை தொடர்ந்து தேசிய அரசாங்கமும் வருகின்ற வாரங்களில் கனடாவின் சர்வதேச விமான நிலையங்களில் வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் கட்டாயமாக Covid -19 மருத்துவ பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்ராரியோ மாகாண முதல்வர் Doug Ford தேசிய அரசாங்கத்தின் இந்த முடிவை வெகுவாக பாராட்டியதுடன், ஒன்ராரியோ மாகாண அரசாங்கத்தின் மருத்துவ பரிசோதனை நடைமுறை தேசிய அரசாங்கத்தின் சர்வதேச விமான பயணிகளின் மருத்துவ பரிசோதனை நடைமுறை அமுலுக்கு வரும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரும் அதே வேளையில் ஒண்டாரியோ மாகாணத்தின் அமெரிக்கா நில எல்லை பகுதிகளிலும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று, தெற்கு ஒன்ராறியோவில் மேலும் நான்கு பொது சுகாதார பிரிவுகளில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

ஒட்டாவா, கிழக்கு ஒன்ராறியோ, தென்மேற்கு மற்றும் மிடில்செக்ஸ்-லண்டன் பொது சுகாதார பிரிவுகளில் உள்ள மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்ப முடியும் என்று கல்வி அமைச்சர் Stephen Lecce வியாழக்கிழமை தெரிவித்தார்

ஆனால் COVID-19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணத்தின் வேறு சில பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.