Reading Time: < 1 minute

பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்ஸ் தடுப்பூசியை கனடா சுகாதார திணைக்களம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.

பொது சுகாதார நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கனடாவில் அதன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நோவாவாக்ஸ் இன்க் விண்ணப்பம் ஜனவரி 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெறப்பட்டது.

கனடா வலைத்தளத்தின்படி, அவர்கள் அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் 76 மில்லியன் டோஸ் வரை தடுப்பூசி போட ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், கனடா சுகாதார திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர், அனைத்து தடுப்பூசி மறுஆய்வு செயல்முறைகளையும் நிறுவனம் விரைவுபடுத்துகிறது. ஆனால், ஒப்புதல் முடிவு எப்போது எடுக்கப்படும் என்பது குறித்து அவர்களிடம் கூடுதல் தகவல்கள் இல்லை என்று கூறினார்.

சமீபத்திய பிரித்தானியா சோதனையில் நோவாவாக்ஸ் தடுப்பூசி 89.3 சதவீதம் செயற்திறனைக் காட்டியது.

தற்போது கனடாவில், ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மற்றும் அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.