Reading Time: < 1 minute

கனேடிய எல்லைப் பகுதிகளில் தொடாந்தும் கோவிட் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறைந்தபட்சம், எதிர்வரும் 30ம் திகதி வரையில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெளிநாட்டுப் பயணிகள் கோவிட் தடுப்பூசி அட்டைகளை சமர்ப்பித்தால் மட்டுமே நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் தங்களது உடல் நிலை பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பயணக் கட்டுப்பாடுகளை களையுமாறு கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பித்து மறுநாளே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.