Reading Time: < 1 minute

கனேடிய மத்திய அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள எல்லை கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிற்குள் பிரவேசிப்பது தொடர்பில் இந்த எல்லை கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த எல்லைக்கட்டுப்பாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தொடர்ந்தும் கோவிட் தடுப்பூச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

தடுப்பூசி ஏற்றுக் கொள்ளாத கனேடிய பிரஜைகள் மற்றும் நிரந்தரமாக வதிவோர் கோவிட் பரிசோதனை ஒன்றை செய்து கொண்டு அந்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிற்குள் பிரவேசிப்பது குறித்த செயலியில் (ArriveCan) பயண ஆவணங்களுடன் தடுப்பூசி விபரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று தடுக்கும் நோக்கில் கனடிய அரசாங்கம் எல்லை பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது