Reading Time: < 1 minute கனடாவில், சாலை விபத்தொன்றில் பலியான இளைஞர் ஒருவருடைய உடல், 18 நாட்களுக்குப் பின் இந்தியா வந்தடைந்தது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Bhador என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sukhchain Singh (23). கனடாவில் வாழ்ந்துவந்த சிங் காரில் பயணிக்கும்போது அவரது காரும் ட்ரக் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக அவரது நண்பர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்த நிலையில், 18Read More →

Reading Time: < 1 minute வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். 26 வயதான லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற பெண்ணே இவ்வாறுRead More →

Reading Time: < 1 minute கரீபியன் படையினருக்கு கனடா இராணுவம், பயிற்சிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கனடிய படையினர் ஜமெய்க்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஹெய்ட்டியில் முன்னெடுக்கப்பட உள்ள அமைதி காக்கும் பணிகளில் கரீபியின் தீவுகள் படையினர் கூட்டாக இணைந்து கொண்டுள்ளனர். ஜமெய்க்காவின் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கனடிய இராணுவப் படையினர் பயிற்சி வழங்கும் பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய படையினர் ஒரு மாத காலம் ஜமெய்க்காவில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்க உள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மில்டன் பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்துச் சம்பவத்தில் மூன்று பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டெரி வீதி மற்றும் 6ம் தெருவிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 26 வயதான ஆண் ஒருவரும், 18 வயதான சிறுவனும் 16 வயதான சிறுமியும் கொல்லப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார்Read More →

Reading Time: < 1 minute குரங்கம்மை நோய் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தனர். ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் வருடாந்த சம்பளத் தொகை 400,000 டொலர்களை விட அதிகமாக உயர்த்தப்பட உள்ளது. மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவின் வருடாந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகில் பூரண சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கையில் ஒரு தடவை பார்கக்கூடிய இந்த அரிய சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பூரண சூரிய கிரகணம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. மாகாணத்தின் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 65 சதங்களினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி தற்பொழுது மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது. நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் 3.9 வீதமாக சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறித்த பாம்பினை மீட்டுள்ளனர். ஒன்பது அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கனடாவில் தனிச்சிறப்புடைய விலங்கினங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பாம்பினை வீட்டில் வளர்த்த நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளது. சட்டவிரோதமான முறையில் இவ்வாறு விலங்குகளை வீட்டில் வளர்ப்பதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ஒன்றாரியோ கிட்சனர் கொனெஸ்டோகா கல்லூரியில் ஏதிலி அந்தஸ்து கோரிய சர்வதேச மாணர்களின் எண்ணிக்கை 324 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் 106 மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரியதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 450 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடு திரும்பினால், தாய் நாட்டில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மீனவர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவின் மெரால் சியாசன் என்ற மீனவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணத்தை வென்றெடுத்துள்ளார். இந்த லொத்தர் சீட்டு காலாவதியாக இன்னமும் 19 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி இந்த லொத்தர் சீட்டுக்கான சீட்லுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏனைய லொத்தர் சீட்டுக்களைப்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தனது பெற்றோரை படுகொலை செய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கென் கெதரீன்ஸ் பகுதி வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. வயது முதிர்ந்த தம்பதியினரின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது. 43 வயதான சீன் ஓவன்ஸ் என்ற நபரை நயகரா பொலிஸார் கைது செய்துள்ளனர். மேரி ஓவன்ஸ் மற்றும் ஹரோல்ட் ஓவன்ஸ் ஆகிய இருவரையும் இந்த நபர் படுகொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாடசாலை சபைகளினால் முன்னணி சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் நான்கு பிரதான பாடசாலை சபைகள் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டொக் மற்றும் ஸ்னெப்செட் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த சமூக ஊடகங்கள் சிறுவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும் வகையில் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து நாம் அனைவர் மத்தியிலும் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து மக்கள் மத்தியல் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பெரும் எண்ணிக்கையிலான கனடிய மக்கள் மரணத்தின் பின்னரான வாழ்வு உண்டு என கருத்து வெளியிட்டுள்ளனர். அன்கு;ஸ் ரெய்ட் என்ற நிறுவனத்தினால் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பல கனடியர்கள் மரணத்தின் பின்னரானRead More →