Reading Time: < 1 minute

கனடாவில் பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் வருடாந்த சம்பளத் தொகை 400,000 டொலர்களை விட அதிகமாக உயர்த்தப்பட உள்ளது.

மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவின் வருடாந்த சம்பளம் 299,900 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வருடாந்த சம்பளம் 8500 டொலர்களினால் அதிகரிக்கப்படஉள்ளது.

இதன்படி ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் வருடாந்த சம்பளம் 203100 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருடாந்தச் சம்பளத் தொகை?
பிரதமரின் மொத்தச் சம்பளம் 389200 டொலர்களிலிருந்து 406200 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

கார்பன் வரி அதிகரிக்கப்பட உள்ள நிலையில், மறுபுறத்தில் அரசியல்வாதிகளின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.