ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தெரிவாகியுள்ளார். மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை தீர்மானிக்கும் வாக்குப் பதிவுகள் நேற்று (திங்கய்கிழமை) ஆரம்பமாகியது. இந்த தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கு பதிவில் ஜோன் ரோறி 63 விகித வாக்குகளையும், ஜெனிபர் கீஸ்மட் 23 சதவிகித வாக்குகளையும் பெற்றனர்.Read More →

வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் பரிமாணத்தில் 6.6 மற்றும் 6.8 என பதிவாகியுள்ளது. கனேடிய நேரப்படி இரவு 10.39 (1:39GMT) அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி, ஒரே நேர் கோட்டுப்பாதையில்Read More →

கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிடின், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும் என தபால் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள தவறுமிடத்து, அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தபால் சங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. கனடாவின் தெரிவுசெய்யப்பட்ட நகரங்ளான விக்டோரியா, எட்மொன்டன், ஹலிஃபொக்ஸ், வின்ட்சன், ஒன்டாரியோ ஆகிய நான்கு இடத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத்Read More →

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி மாயமான விவகாரம் குறித்து கனடா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி காணாமற்போன சம்பவம் எழுப்பும் கேள்விகள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவுடன் தனிப்படட சில முரண்பாடுகள் உள்ள போதிலும், இவவாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை கனடா ஒருபோதும் ஆதரிக்காது என்று கிறிஸ்டியாRead More →

மத்திய ஆல்பர்ட்டா பகுதியில் 48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொது மக்களின் “அவசர உதவி” கேட்டார். இதற்க்கு முன்னர் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் றோயல் கனேடியன்Read More →

ரொறன்ரோ பகுதியில் உள்ள இணைய பாவனை மையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மதியம் 12:15 மணியளவில் 618 Bloor Street West பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடனத்திருந்தார். குறித்த இணைய பாவனை மையத்தில் இரண்டு ஆண்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இதன் போது படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார்Read More →

போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குற்றவாளிகள் கைகளில் போய் சேர்ந்துகொண்டிருந்த பெருமளவு அரசாங்கத்துக்கு கணக்கு காட்டாத, வரிசெலுத்தாத லாபம். எங்கள் குழந்தைகள் பாதுகாப்பு. கனடாவில் இன்று கன்னாபீஸ் சட்டப்பூர்வமாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், அண்மையில் கனடா பிரதமர் ஜெஸ்டின்Read More →

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த வாக்குப்பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் ஒக்டோபர் 10 முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை 51 இடங்களில் நடைபெற்ற முற்கூட்டிய வாக்குப்பதிவில் சுமார் 124,000 பேர் மட்டுமே வாக்களித்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட மிகவும் குறைவான வாக்குபதிவே இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்Read More →

கடந்த வருடத்திலிருந்து சீனாவுடனான வர்த்தக உறவைப் பேணுவதில் கனடிய அதிகாரிகள் அதிக கவனஞ் செலுத்திவருவதாக கனடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதிஷ்ட பூகோள மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கனடிய பிரதமர் நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனா, உலக நாடுகளின் வர்த்தக மற்றும் பெருளாதார உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் மிகப் பலம் பொருந்திய இரண்டாவது நாடாக அமைந்தள்ளது. இந்நிலையில், சீனாவுடன் வர்த்தக உறவை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதும்Read More →

சுமார் 25 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் அகதிகள், கனேடியர்களைவிட அதிகம் சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்தல் துறை ஆவணம் ஒன்று இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் 25 ஆண்டுகளாக வாழும் அகதிகள், கனேடியர் ஒருவரின் ஆண்டு வருமானமான 45,000 டொலர்கள் அல்லது அதைவிட அதிகம் சம்பாதிப்பதாக தெரிவிக்கிறது. மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அண்மையில் சிரியாவிலிருந்து வந்த 50,000 அகதிகள், இப்போதிலிருந்து பல ஆண்டுகளுக்குப்Read More →