Reading Time: < 1 minute

தேவையானவை :

கோழி- ஒரு கிலோ
வெங்காயம்- 2
தக்காளி-2
பச்சைமிளகாய்- 2
இஞ்சி – இரண்டு அங்குலத் துண்டு
பூண்டு- பத்து பற்கள்
மிளகு- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்
தனியா-2 டேபிள் ஸ்பூன்
மஞ்சத்தூள்- 1 /2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்- 2 டேபிள் ஸ்பூன்
பட்டை-4
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை- 2 கொத்து
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை- 2 கொத்து

செய்முறை :

  1. கோழியை தேவையான அளவில் துண்டுகள் போடவும்.
  2. வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
  3. மிளகுடன் இஞ்சி பூண்டை சேர்த்து அரைக்கவும்.
  4. கோழித் துண்டுகளில் மிளகுத்தூள்,மஞ்சத்தூள்,உப்புத்தூள், சிறிது இஞ்சி பூண்டு கலவை ,மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
  5. பின்பு அதில் ஒரு கப் நீரைச் சேர்த்து குக்கரில் அரை வேக்காடாக வேகவைக்கவும்.
  6. கடாயில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வெங்காயத்தை போடவும்.
  7. வெங்காயம் சிவந்ததும் பச்சைமிளகாய்,மீதியிருக்கும் இஞ்சி பூண்டு அரவை மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
  8. பின்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் மற்றும் வேகவைத்த கோழித் துண்டூகளை போட்டு தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி,அடுப்பை நிதானமாக வைத்து வேகவிடவும்.
  9. மசாலாவிலுள்ள நீர் சுண்டியதும் மிளகுத்தூளைத் தூவி ஒரு கிளரு கிள்றிவிட்டு கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கிவிடவும்.