தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்த தினம் இன்று! அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எந்தப் பெயரை எவர் சொல்லக் கேட்டாலும் நெஞ்சம் நெகிழுமோ, கண்கள் பனிக்குமோ, செவிகள் குளிருமோ, பொங்கிப் பொங்கி பெருமிதம் பெருக்கெடுத்து வழியுமோ… அந்தப் பெயர் பிரபாகரன். தமிழர்களாகிய நாங்கள் இப்பூவுலகில் வாழ்ந்தோம் என்பதற்கான சாட்சியமாய் அமைந்த நித்தியமான கல்வெட்டு உங்களது பெயர். உங்கள் தலைமையின் கீழ் நாங்கள் தோல்வியடையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய பேராசைRead More →

கனடாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம், ஒசாவா மற்றும் ஒன்ராறியோவில் தனது கார் உற்பத்தி ஆலைகளின் சேவைகளை நிறுத்த தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிறுவனம் தமது சேவையை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிறுவனம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் நிலையில், இத்திடீர் முடிவால் அவர்கள் அனைவரும் வேலையை இழக்க நேரிடும். உலக மறுசீராக்கல் நடவடிக்கையின் கீழ், குறைந்தளவு காபன் உமிழ்வு அல்லதுRead More →

கனடாவில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய பயணிகள் கப்பலின் சிதைவுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1888-ஆம் ஆண்டு மாகாஸா என்ற ஏரியில் 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக குறித்த கப்பலானது பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தையடுத்து குறித்த கப்பலில் இருந்த 16 பேர் காப்பாற்றப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தக் கப்பலின் சிதிலமடைந்தRead More →

கடந்த சில வாரங்களாக நாடு தழுவிய அளவில் சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த கனடா தபால் ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புகின்றனர். நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரையில் நீடித்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்தே, கனடா தபால் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். C-89 எனப்படும் குறித்த அந்த சட்டமூலத்தின் மீதான மூன்றாது வாசிப்பின் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 166 வாக்குகளும்Read More →

மிசிசாகாவில் (Mississauga, Canada) நகைக் கடையொன்றில் (Nov 21, 2018, Around 12:15 p.m) இடம்பெறவிருந்த பாரிய கொள்ளை, கடை உரிமையாளர்களின் துணிகர செயலால் முறியடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்த கொள்ளையர்களை கடை உரிமையாளர்கள் வாளைக் காட்டி விரட்டியடித்துள்ளனர். Mississauga jewellery store owners fend off robbery suspects with swords மிசிசாகாவில் (Mississauga, Canada) நகைக் கடையொன்றில் இடம்பெறவிருந்த பாரிய கொள்ளை,Read More →

மோன்க்டொன் பகுதியில் காணாமல் போன இரண்டு சிறுமிகளும், ரொறொன்ரோவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயது நிறைந்த வியட்னாம் மாணவிகளான இருவரும், மோன்க்டொன் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி கற்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும், கடந்த நவம்பர் 12ஆம் திகதி அவர்களது விருந்தினர் குடும்பத்தில் வைத்து காணாமல் போயிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்திருந்த பொலிஸார், இரண்டு சிறுமிகளையும் ரொறொன்ரோவில் வைத்து கண்டுRead More →

சென் மைக்கல்ஸ் கல்லூரியின் அதிபர் மற்றும் சபைத் தலைவர் ஆகியோர் பதவி விலகியுள்ளதாக, சென் மைக்கல்ஸ் பாடசாலை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்பிலான தாக்குதல் மற்றும் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர். பாடசாலை சபைத் தலைவர் அருட்தந்தை ஜெஃபெர்சன் தோம்சன் மற்றும் கல்லூரி அதிபர் கிரெக் றீவ்ஸ் ஆகியோர் உடனடியாக நடப்புக்கு வரும் வகையில் பதவி விலகுவதாகRead More →

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஊடகங்களுக்கு இலஞ்சம் வழங்க முயற்சிப்பதாக, எதிர்க்கட்சியான கொன்சவேற்றிவ் குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது சாதகமான ஊடகத் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலேயே பிரதமர் ஊடகங்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊடகத்துறைக்கு உதவும் வகையில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான வரிச் சலுகைத் திட்டத்தை நிதியமைச்சர் பில் மோர்னியூ அண்மையில் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமையை தொடர்ந்தே பிரதமர் ட்ரூடோ அரசாங்கத்தின் மீதானRead More →

அரசியலிலிருந்து முழுமையாக விடைபெறுவதாக கனேடிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் கிரெவல் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி அவர் தனது விலகலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த அரசியல் விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிராம்டன் கிழக்கு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது விலகல் குறித்து பிரதம கொரடாவிடம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.Read More →

கனடா டொரோண்டோவில் Balachandran Law என்ற சட்ட நிறுவனத்தை நடத்திவந்த;  இளம் தமிழ் வழக்கறிஞர் அகி பாலச்சந்திரன் (Aghi Balachandran) நேற்று மரணமடைந்தார்.  மிக இளம் வயது தமிழ் குற்றவியல் வழக்கறிஞராக இவர் டொரோண்டோவில் தனது சேவையை ஆற்றி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய மறைவையொற்றி பல்வேறு செய்திகள் வந்த நிலையில், அகி பாலச்சந்திரன் அதிகரித்த fentanyl பாவனையால் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக Toronto Sun இன்று செய்தி வெளியிட்டுள்ளது.Read More →