Reading Time: < 1 minute கனடாவின் இட்டாபிகொக் பகுதியில் கோவிட் 19 தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இட்டாபிகொக் பொது வைத்தியசாலையின் ஓர் பகுதியில் இவ்வாறு கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது வைத்தியசாலையில் இருதய நோய் பிரிவில் இந்த தொற்று பரவுகை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த சிகிச்சை பிரிவிற்கு நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute புலம்பெயர்தல் பிரச்சினைகளால் 24 ஆண்டுகளாக பிரிந்திருந்த கணவனும் மனைவியும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளதைக் குறித்த ஒரு நெகிழவைக்கும் செய்தி இது. திருமணமாகி 24ஆண்டுகள் ஆகிய நிலையிலும், அந்த தம்பதி இணைந்திருந்த நாட்கள் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். கணவர் பரம்ஜீத் பசந்தி (Paramjit Basanti, 72) கனடாவில் வாழ, மனைவி சரன்ஜீத் பசந்தி (Charanjit Basanti, 55) இந்தியாவில் வாழ்ந்துவந்தார். இந்த காதல் தம்பதியர் இப்படி ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டேRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிராம்டனில் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்று நடைபெற உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு உலக அளவில் பாரிய ரசிகர்களின் வரவேற்பு காணப்பட்டது. அந்த நிலையில் மீண்டும் இவ்வாறான ஓர் கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. t20 போட்டி தொடராக இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் ஆறு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரஜை ஒருவரை தீவிரவாத சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய போலீசார் கைது செய்துள்ளனர். லண்டன் மெட்ரோ போலிட்டன் போலீசார் குறித்த கனடியரை கைது செய்துள்ளனர். 28 வயதான குறித்த கனடியரை ஹீட்ரு விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் இருந்து புறப்பட்டு ஹீத்ரூ விமான நிலையத்தை அடைந்த நிலையில் சந்தேக நபரை கைது செய்ததாக அதிகாரிகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் டொரன்டோ நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு எவ்வளவு பணம் உழைக்க வேண்டும் என்பது பற்றி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் டொரண்டோ நகரின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு மணித்தியாலம் ஒன்றிற்கு 40 டாலர்களையேனும் உழைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் பிரதான நகரங்களில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவது சவால் மிக்க விடயமாக மாறிRead More →

Reading Time: < 1 minute இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.Read More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் கேபிள் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் கியூபெக்கின், மொன்றியாலில் இடம்பெற்றுள்ளது. காட்சி காண் நோக்கில் கேபிள் காரில் பயணித்த போது கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் கேபிள் கார் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கேபிள் காரில் பயணித்தவர்கள் வீசி எறியப்பட்டு விபத்துக்குள்hகியுள்ளனர். விபத்துக்கு உள்ளான இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute ஊடகங்கள் தொடர்பில் கனேடிய மக்களுக்கு போதியளவு தெளிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பிலான பிரச்சினைகளின் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு சக்திகளினால் பொதுமக்கள்; பிழையாக வழிநடத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாகாண அசராங்கங்களும் பாடசாலைகளும் இந்த விவகாரத்தில் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஊடகங்கள் பற்றிய அறிவு மக்கள் மத்தியில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் டொரன்டோ நகரத்தில் இயங்கி வரும் சில மளிகை கடைகள் பியர் மற்றும் வைன் வகைகள் விற்பனை செய்வதனை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. பியர் மற்றும் வைன் வகைகள் அதிகளவில் களவாடப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த பொருட்களுக்கான லாப வீதம் மிகவும் குறைவானது என மளிகை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தங்களுக்கு பெரிய நன்மை கிடைக்கவில்லைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகர வீதிகளில் படுத்துறங்கும் அகதிகளுக்கு உதவுவதாக தொழிலதிபர் ஒருவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். மொஹமட் ஃபகாய் என்ற தொழிலபதிரே இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளார். வீதிகளில் தங்கியிருக்கும் அகதிக் கோரிக்கையாளர்களுக்கு வீடு ஒன்றுக்கான வாடகை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பராமவுன்ட் ஃபைன் ஃபூட்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரான மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 20000 டொலர்களை நன்கொடையாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அகதி நல ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள்Read More →

Reading Time: < 1 minute கனேடிய மருத்துவமனை ஒன்று, இரத்த வங்கி போல், குழந்தைகளின் மலத்தை சேமிக்கும் வங்கி ஒன்றைத் துவக்கியுள்ளது. அபூர்வ மரபியல் பிரச்சினை ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை Kayleah Atkins. பேசவோ, நடக்கவோ முடியாத அந்தக் குழந்தைக்கு, Clostridium difficile அல்லது C. diff என அழைக்கப்படும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இந்த பாக்டீரியா தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலை உருவாக்கும். ஆகவே, குழந்தை Kayleah அழுதுகொண்டே இருக்க, என்ன செய்வதென பெற்றோருக்குத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர். இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் டொரன்டோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஸ்காப்ரோ டான்சிங் மற்றும் மார்னிங் சைட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் காட்டுத்தீ காரணமாக 10 மில்லியன் ஹெக்ரயார் காணி தீக்கிரையாகியுள்ளது. கனடாவில் நியூ பவுண்ட்லாந்து தீவு பகுதிக்கு நிகரான அளவு காணி காட்டு தீ காரணமாக தீக்கிரையாகியுள்ளது என கனடிய காட்டு தீ நிலையம் அறிவித்துள்ளது. கனடிய வரலாற்றில் இந்த ஆண்டில் மிக அதிகளவான காட்டுத்தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு 7.6 ஹெக்ரயார் காணிகள் காட்டுத்தீயினால் அழிவடைந்துள்ளது. அதன் பின்னர் இந்த ஆண்டில் மிகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் விவாகரத்தாகி 55 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஒரு தம்பதியினர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பசி தீயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது லைன் மற்றும் லான ஆகிய தம்பதியினரே இவ்வாறு 55 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். முதல் திருமண பந்தத்தின் பின்னர் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுக் கொண்டுள்ளனர். பின்னர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாழ்ந்து வரும் ஆசிய கனடியர்கள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவுதகாவும், வெறுப்புணர்வு காட்டப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிலவிவரும் அரசியல் பதற்ற நிலைமைகள் மற்றும் கோவிட் பெருந்தொற்று நிலைமை ஆகிய காரணிகளினால் இவ்வாறு ஆசிய கனடியர்கள் மீது வெறுப்புணர்வு பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 2500 ஆசிய கனடியர்கள் மற்றும் ஏனைய கனடியகர்களை உள்ளடக்கியதாக இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவின் சில பகுதிகளை சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளி தாக்குதலினால் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சொத்துக்களுக்கு சேதம்எனினும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடியா சுற்றாடல் திணைக்களம் சூறாவளிக்காற்று தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூறாவளி காற்று தாக்கம் காரணமாக சுமார் 125 வீடுகள் சேதமடைந்துள்ளன. சூறாவளி தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மரங்கள் முறிந்து வீழ்ந்தமை,Read More →