ஒன்ராறியோவின் Stouffville நகர்ப்புற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டை நடத்திய மூன்று சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யோர்க் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Read More →

கனடாவின் சர்ரே நகர்ப்பகுதியில் விபத்திற்குள்ளான வாகனத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், மனித கொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவினர் நேற்று (புதன்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளனர். விசாரணைகளின் பொருட்டு பெயர்களை வெளியிடாத அதிகாரிகள், தாயும் அவரது இரண்டு மகன்களுமே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சந்தேகத்திற்கிடமாக உள்ளதென குறிப்பிடும் குறித்த விசாரணை அதிகாரிகள் மற்றும் பொலிஸார், அது தொடர்பான ஆதாரங்களை சேகரித்துRead More →

அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தக்காரராக செயற்பட்டு 2013 ஆம் ஆண்டில் ரகசிய தகவலை கசியவிட்ட பின்னர், அமெரிக்க ஊடகவியலாளர் எட்வர்ட் ஸ்னோவ்டன் என்பவருக்கு தங்குமிடம் கொடுத்த பெண்ணொருவருக்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் நேற்று முன்தினம் ரொறொன்ரோவுக்கு வந்திறங்கிய பின்னர் அதிகாரிகளால் அவருக்கான ஆவணப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. வென்னெசா மாய் பொண்டலியன் ரொடெல் என்ற குறித்த பெண் தனது புதல்வியுடன் கனடாவுக்கு வந்துள்ளார்.  அவர்களுக்கான நிரந்தர வதிவிடத்தை அடைவதற்குRead More →

கனடாவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜனவரி மாதத்துடன் குறைந்துள்ளதாக நேற்று வௌியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கணணிமயப்படுத்தப்பட்ட தரவு வௌியீட்டின் படி 4.82 பில்லியனில் இருந்து 4.25 பில்லியன் டொலர் வரை வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஜா மலர்களின் ஏற்றுமதி அதிகரிப்பை அடுத்து கடந்த ஆறு மாதங்களில் இந்த வர்த்தக சமநிலை ஏற்பட்டுள்ளதாக கனடாவின் தேசிய வங்கியொன்றின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் தொடக்கம் முதல்Read More →

ஆப்கானிஸ்தானில் கடந்த ஐந்து வருடங்களாக பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் பிரிந்து சென்ற தம்பதியர் கனடாவின் நீதிமன்றத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர்.  மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவர் மீதான வழக்கு விசாரணையின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க பிரஜையான கெய்ட்லன் கொல்மன் (33 – வயது) பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது கணவனுடனான உறவை கடந்த 2017 ஆம் ஆண்டு முறித்துக் கொண்டார். இந்த சம்பவத்தைRead More →

கனடாவின் பெருநிறுவன நிர்வாகக் குழுக்களில் பாலின வேறுபாடு தொடர்வதாக ரொறென்ரோ டொமினியன் வங்கியின் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் அமெரிக்காவை விட அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. நாட்டின் வளத் துறைகளிலும், சிறு நிறுவனங்களிலும் இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்று பொருளியல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். 2015 ஆம் ஆண்டில் நாட்டின் மிகப்பெரிய பத்திரங்கள் ஒழுங்குபடுத்தும் அமைப்பினர், நிர்வாக குழுக்களின் பன்முகத்தன்மை அதிகரிப்பதைRead More →

பணியிடத்தில் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதில்லை என உறுதிபடுத்தும் வகையில், மனிடோபா அரசாங்கம் விழிப்புணர்வு பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன, அதனை எவ்வாறு அறிக்கையிடுவது என்பது பற்றி ஊழியர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் விளக்கும் வகையிலான பதாதைகளுடன் இந்த விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் பாலியல் ரீதியான நகைச்சுவைகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்புவதை கண்டிக்கும் வகையிலான பதாதைகளும் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பொருத்தமற்ற நடத்தை என்பது என்ன என்பதுRead More →

போலி தொலைபேசி அழைப்புக்களின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Guelph Hydro  மற்றும் Alectra Utilities நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. தமது நிறுவனத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாகக் கூறி போலியான முறையில் சட்டவிரோத குழுவொன்று அழைப்புக்களை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலுவைக் கட்டணத்தை செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என சிலர் தொலைபேசி ஊடாக எச்சரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்Read More →

பிரதம நீதியரசர் பதவிக்காக முன்னாள் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் ராய்போல்ட் செய்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு மானிடோபவின் நீதியரசர் ஒருவரை பிரதம நீதியரசர் பதவிக்காக நியமிக்குமாறு அப்போதைய நீதியரசர் ராய்போல்ட் பரிந்துரை செய்திருந்தார். எனினும் அந்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நீதியரசர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சார்பானவர் என கூறப்படுகின்றது. இதேவேளை, தமக்கும் பிரதமர்Read More →

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (நஃப்டா) குறித்து நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி இதுவரையில் தளர்த்தப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் நப்டா உடன்படிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது. எனினும், முதலில் வரி விதிப்பு நீக்கப்படும் வரையில் உடன்படிக்கையில் திருத்தங்களை செய்வதற்கு கனடா அவசரம் காண்பிக்காது என வெளிவிவகாரRead More →