நியுசிலாந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வெளியிட்ட 80 பக்க அறிக்கையினை கனேடிய இணைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய வலது சாரி இணையதளம் ஒன்றே இவ்வாறு குறித்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகளை ஹமில்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட இனத்தாருக்கு எதிராக மனதார வெறுப்பைத் தூண்டுவது கனேடிய சட்டத்தின்படிRead More →

ஒட்டாவாவின் திறைசேரி தலைவராக ஜோய்ஸ் முர்ரே, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜேன் ஃபில்போடின் சர்ச்சைக்குரிய இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவரது பதவியேற்பு விழா பிரதமர் மற்றும் ஆளுநரின் தலைமையில், ஆளுநரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. திறைசேரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வான்கூவர் நாடாளுமன்ற உறுப்பினரான முர்ரே, முன்னாள் மாகாண அமைச்சரவை அமைச்சராகவும், திறைசேரி தலைவரின் நாடாளுமன்ற செயலாளராகவும்Read More →

ஒண்டாரியோ மாகாண அரசு கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள், தமது பாடசாலை கழகத்தில் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு வேலையிழப்புக்களை ஏற்படுத்தும் என, TDSB தெரிவித்துள்ளது. வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, 800 உயர்தர பாடசாலைகளின் ஆசிரியர் பணியிடங்களும், 216 ஆரம்பநிலை பாடசாலைகளின் ஆசிரியர் பணியிடங்களும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது. மாகாண அரசின் செலவுகளை குறைக்கும் நோக்கில், தரம் 8க்கு மேலான மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பு ஒன்றுக்கு, 22 இலிருந்துRead More →

ஈராக் மற்றும் உக்ரேனில், கனடிய இராணுவத்தினரின் படை நடவடிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன. ஈராக்கில், இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், உக்ரேனில், ரஷ்யாவின் அத்துமீறல்களை தடுக்கும் நோக்கிலும், கனடிய இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். ஈராக்கில் உள்ள சுமார் 500 கனடிய படையினரின் நடவடிக்கைகள் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், உக்ரேனில் உள்ள 200 வரையிலான கனடிய இராணுவத்தினர், 2022ம் ஆண்டுவரை அங்கு நீடித்திருப்பார்கள். இவை தொடர்பிலான அறிவிப்புக்களை, கனடிய பாதுகாப்புRead More →

ஒன்ராறியோவில் பிராம்டன் நகரில் 23 நண்பர்கள் குழுவாக எடுத்த 649 க்கு $ 1 மில்லியன் MAX Million ஜாக் போட் வென்றுள்ளது. 23 பேர் கொண்ட இந்த குழு Sept. 21, 2018 ல் எடுத்த சீட்டிலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளது. இவர்கள் தமது வெற்றிக்குரிய காசோலையை கடந்த வியாழக்கிழமை (March 14, 2019) OLG CANADA விடமிருந்து பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்றவர்களில் 15 க்கும் மேற்பட்டோர் தமிழர்கள்Read More →

நோர்த் யோர்க்கில் உள்ள நிகழ்வு மண்டபம் ஒன்றில் ஒருசிலரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Dufferin Streetற்கு மேற்கே, Finch Avenueவில் அமைந்துள்ள குறித்த அந்த நிகழ்வு மண்டபத்தில் நேற்று அதிகாலை 1.20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது குறைந்தது 3 பேர் கத்திக் குத்துக்கு இலக்கானதையும், இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குRead More →

வாகனத்தினுள் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டதில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான ஆண்கள் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Brookhaven பிரதேசத்தில், Trethewey Drive மற்றும் Jane Street பகுதியில், நேற்று அதிகாலை நான்கு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த வாகனத்தின் மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்குள் இருந்த மூவர் படுகாயமடைந்ததுடன், அருகே இருந்த வீடுகள் மீதும் குண்டுகள் பாய்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச்Read More →

வாகனம் ஒன்று கம்பத்துடன் மோதி தீப்பற்றி எரிந்ததில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான அதன் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ரொரன்ரோ Corktown பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. King Street East மற்றும் Parliament Street பகுதியில் நேற்று காலை 6.30 அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, மின் கம்பத்துடன் குறித்த அந்த வாகனம் மோதுண்டதை அடுத்து, அதன் சாரதி வாகனத்தினுள் இருந்து வெளியே வரமுடியாதவாறு சிக்குண்டிருந்ததாகவும், அந்த வேளையில்Read More →

எட்மன்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது குறித்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, அண்மைக்காலமாகவே எட்மன்டன் பகுதியில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.Read More →

பிரம்ரனில் நேற்று (March 17, 2019) அதிகாலை 21 வயதான இளைஞனை மோதிச் சென்ற வாகனத்தை பொலிசார் தேடுகின்றனர். Orenda Road மற்றும் Clark Boulevard சந்திக்கும் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் பாதசாரி றோட்டினை கடக்க முற்பட்டாரா அல்லது கடக்கும்போது விபத்து இடம்பெற்றதா என நிச்சயமற்றதாக உள்ளது என பொலிசார் கூறுகின்றனர் . இளைஞனை மோதியRead More →