Reading Time: < 1 minute கனேடிய நாடாளுமன்றம், மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவிக்கும் பிரேரணையை, நேற்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்ட கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த், ஒரு தமிழ் கனேடியர் என்ற முறையில், கனடா நாடாளுமன்றம், மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அங்கீகரித்ததற்காக தான் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன், போரில் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், போரால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்த சோகத்தின் வலி, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்து இனப்படுகொலை என கனடிய பாராளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா பாராளுமன்றம் அங்கீகரித்தது. இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்த உலகின் முதல் பாராளுமன்றமாக கனடா பாராளுமன்றம் அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதற்கான பிரேரணையை ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதி (Scarborough-RougeRead More →

Reading Time: < 1 minute நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கார்லோ மற்றும் பிளக்பொயின்ட் ஆகியனவற்றுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நியூபிரவுன்ஸ்வீக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற போது பாடசாலை பஸ்ஸில் மாணவர்கள் பயணித்தனரா என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை. விபத்து காரணமாகRead More →

Reading Time: < 1 minute ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவரது அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்யும் சட்டமூலத்தை நேற்று செவ்வாய்க்கிழமை செனட்டில் கனடா அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போருக்குப் பின்னர் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் தொடர்ச்சியாக இந்தத் தடை அமைகிறது. தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு காரணமானவர்கள் உட்பட புடினின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைRead More →

Reading Time: < 1 minute கனேடிய விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பயணிகள் அவதிப்பட்டுவருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கனடா போக்குவரத்து அமைச்சர் உமர் அல் காப்ரா தெரிவித்துள்ளார். நெருக்கடிகளைத் தவிர்க்க கனடா விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் ( CATSA) மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என்று இன்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். விமானங்களை குறைக்குமாறு விமான நிறுவனங்களை நாங்கள் கேட்டுக் கொண்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லைRead More →

Reading Time: < 1 minute வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து கனேடியர்கள் கவலை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மளிகைப் பொருட்கள் முதல் எரிவாயு வரையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. றொரன்டோ பெரும்பாக எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாரத்திற்கு 50 டொலர்களுக்கு எரிபொருள் பயன்படுத்தும் தாம் 80 டொலர்களை செலவிட நேரிட்டுள்ளது என சாரதியொருவர் தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்கள் விலைகளும் அதிகளவில் உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைக்கு மத்தியில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோவில் சுற்றுலா சென்ற இந்திய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பஞ்சாபிலிருந்து உயர் கல்வி கற்பதற்காக கனடாவுக்கு கடந்த ஆண்டு வந்தவர் Navkiran Singh (20). அவர் ஒன்ராறியோவிலுள்ள Eldorado பூங்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கிருந்த நீர்நிலையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்வி கற்கச் சென்ற தங்கள் மகன் பரிதாபமாக பலியான நிலையில், Navkiran Singhக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்காக அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் சாலை விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய சாரதி கைதாகியுள்ளார். ரொறன்ரோவின் Church-Wellesley சந்திப்பில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த சாலை விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்த பாதசாரி, சர்ச் தெருவின் கிழக்குப் பக்கம் நடந்து சென்றுகொண்டிருந்த போது சாம்பல் நிற ஹோண்டா மினிவேன் மோதியுள்ளது. மட்டுமின்றி, சுமார் 100 மீற்றர் தொலைவுக்கு அந்த நபர் வாகனத்தில் சிக்கிRead More →

Reading Time: < 1 minute உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலக அளவில் உணவு மற்றும் எரிசக்தி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கனடா உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 70 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஜி7 நாடுகளின் சிறந்த இராஜதந்திரிகளுக்கான கூட்டம் ஒன்றை ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் முன்னெடுத்துள்ளார். அதில், உக்ரைன் உடனான போர் ஒரு உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும்,Read More →

Reading Time: < 1 minute கனேடிய மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல இடங்களில் இந்த வசந்த காலத்தின் துவக்கத்தில் காட்டுத்தீ உருவானது. அந்த இடங்களின் வனத்துறை மேற்கொண்ட ஆய்வில், பல இடங்களில் யாரோ தீவைத்ததால் காட்டுத்தீ பரவியிருந்தது தெரியவந்தது. இதற்கிடையில், Monte ஏரிப்பகுதியில் வாழும் ஒருவர், அருகிலுள்ள மலைப்பகுதியில் புகை வருவதையும், அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நீல நிற ட்ரக் நிற்பதையும் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகளும், இதுபோல சந்தேகத்துக்குரிய ட்ரக்கைப் பயன்படுத்தும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பரபரப்பான சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட ரொறன்ரோ பெண் ஒருவர் TTC மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், தமக்கு ஏற்பட்ட விபத்தை தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தம்மை மீட்க முயற்சி முன்னெடுத்தவர்கள் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட Shamsa Al-Balushi என்ற பெண்மணி தெரிவிக்கையில், விபத்து நடந்த பின்னர், தொடர்புடைய பகுதிக்கு வரும் ரயிலைRead More →

Reading Time: < 1 minute கனடாவுக்குள் அகதிகள் வரும் பாதை ஒன்றை நிரந்தரமாக மூடவேண்டும் என பெடரல் அரசை கியூபெக் மாகாண பிரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, கனடா அமெரிக்க எல்லையில் Roxham Road என்றொரு கிராம சாலை உள்ளது. அமெரிக்காவிலிருந்து அகதிகள் அந்த சாலை வழியாக கனடாவுக்குள் நுழைந்துவிடுவதுண்டு. அந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் ஒன்ராறியோ நகரின் தெற்கே அமைந்துள்ளது. பெருந்தொற்று காலகட்டத்தில் அந்த சாலையில் உள்ள எல்லை கடக்கும் பகுதி பெரும்பாலும் மூடப்பட்டிருந்த நிலையில்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், சாரதி ஒருவர் வாகன பதிவு எண் புதுப்பித்தல் விதி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்ராறியோவின் பிராம்டனில் வசிக்கும் மத்தியாஸ் ரூசோ என்பவர் கியூபெக்கின் Gatineau பகுதியில் பயணித்த நிலையில், அவரது வாகன பதிவு எண் ஏப்ரல் மாதமே காலாவதியானதாக கூறி 489 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் வாகன எண் புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்துள்ள நிலையில், புதுப்பித்தல்Read More →