Reading Time: < 1 minute

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், அதன் எதிரொலியாக உலகளவில் தாமிரத்தின் விலை உயரக்கூடும் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.

உலகின் ஒட்டுமொத்த தாமிர உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவு உற்பத்தி செய்யப்பட்டு வந்த சுரங்கத்தை, அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமை ஃபர்ஸ்ட் குவாண்டம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டதை கண்டித்து பனாமா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

அதோடு சுரங்கத்தில், எந்திரங்களை இயக்க தேவையான நிலக்கரியை எடுத்து வர முடியாதபடி அருகே உள்ள துறைமுகத்தை ஒரு மாதத்துக்கு மேலாக மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் முற்றுகையிட்டு வந்தனர்.

அதேவேளை கடந்த ஒரு மாதமாக அங்கு சுரங்கப்பணிகள் நடைபெறாததால் உலகளவில் தாமிர உற்பத்தி குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.