Reading Time: < 1 minute கனடாவில் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரம்டனின் ஸ்பேரேவ் பூங்காவில் இந்த கத்தி குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டாவின்டர் காவூர் என்ற 43 வயதான பெண்ணே இவ்வாறு கத்தி குத்துச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவ் நிஷான் சிங் என்ற 44 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தRead More →

Reading Time: < 1 minute உலகின் மிகப் பெரிய இரு கண் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டேவிட் கிப்னேய் என்ற நபர் இவ்வாறு தொலைநோக்கி ஒன்றை உருவாக்கி வருகின்றார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக தாம் வானியல் ஆய்வாளராக கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். 19 ஆண்டுகளாக இந்த இரு கண் தொலைநோக்கியை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக 400000 டொலர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். பகல்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாகாண மக்கள் முடிந்தளவு பொது வெளியில் உலவித் திரிவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவுகை காணப்படுவதனால், வளி பாரியளவில் மாசடைந்துள்ளது. அல்பர்ட்டாவின் எட்மோன்டன் மற்றும் கல்கரி ஆகிய நகரங்களின் வளியின் தரம் மோசமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளின் காற்றின் தரம் குறைவாக காணப்புடுவதனால் மக்கள் நோய்வாய்ப்படும்Read More →

Reading Time: < 1 minute இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலன்ஸ்கீ மற்றும் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜப்பானில் நடைபெறும் ஜீ7 தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி, பிரதமர் ட்ரூடோவை சந்தித்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக செயற்பட உள்ளதாக கனடிய பிரதமர் உறுதியளித்துள்ளார். தொலைபேசி வழியாக அடிக்கடி பேசிக் கொள்வதாகவும் நேரில் சந்தித்து உரையாடக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைனுக்குRead More →

Reading Time: < 1 minute ஓன்றாரியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் ரென்பிரிவ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் இருந்த ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினைRead More →

Reading Time: < 1 minute வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட வந்ததாகவும் இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்கRead More →

Reading Time: < 1 minute காட்டுத்தீ காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக 782,000 ஹெக்டேர் நிலங்கள், கால்பந்து மைதானங்கள் உட்பட 3,000 சதுர மைல்களுக்கு மேல் எரிந்துள்ளன என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கனடா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஊழியர்கள் காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அல்பேர்ட்டாவில் 93 பகுதிகளில் காட்டுத்தீRead More →

Reading Time: < 1 minute இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவானRead More →

Reading Time: < 1 minute இரண்டு இந்தியக் குடும்பங்களுக்கு ஒரே நேரத்தில் துக்க செய்திகள் வந்துள்ளன. கடந்த வாரம், கனடாவின் தலைநகரான Ottawaவில் நிகழ்ந்த விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் இருவர் பலியாகினர். கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, மே மாதம் 12ஆம் திகதி, அதிகாலை 5.30 மணியளவில், Ottawaவில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பஞ்சாபைச் சேர்ந்த Balwinder Singh (21) மற்றும் Sachin Chugh (22) ஆகிய இரண்டு இளைஞர்கள் பலியாகினர். பிள்ளைகள் பலியான செய்தியறிந்துRead More →

Reading Time: < 1 minute கல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். கல்கரியின் ட்ரக் தரிப்பிடமொன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பதனை பொலிஸார் அவதானித்துள்ளனர். ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்து விட்டதாகவும் படுகாயமடைந்த மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர்Read More →

Reading Time: < 1 minute வடக்கு மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.Read More →