Reading Time: < 1 minute கனடாவின் பிரதான விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையத்தின் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல பயணிகளது பயணப் பொதிகள் தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான குளிருடனான காலநிலையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சில பயணிகள் தங்களது பயணப் பொதிகளுக்காக சில நாட்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது. பயணிகளின் பொதிகளை காவிச் செல்லும் இயந்திரப் பட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு பயணப்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளனர். மாகாணம் முழுவதிலும் மோசமான காலநிலை நிலவி வருவதாகவும் இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை எவ்வளவு துரித கதியில் மாற்றம் பெறுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாகப் பெண் பனிக்கரடிகள், பனிக்கரடிக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வாளர்கள் கனடிய ஆர்ட்டிக் வட்டாரத்தின் தென் பகுதியை விமானம் மூலம் ஆராய்ந்து பனிக்கரடிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு வருகின்றனர். மிக அண்மையில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள்Read More →

Reading Time: < 1 minute அமெரிக்கா மற்றும் கனடாவைத் தொடர்ந்து தாக்கும் கடுமையான உறைபனி காரணமாக குறைந்தபட்சம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பஃபலோ நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்கா முழுவதும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர், இதேவேளை கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள மெரிட் நகருக்கு அருகே பேருந்து கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் புயல் குறையும் எனRead More →

Reading Time: < 1 minute கனேடிய மக்கள் மிகவும் அதிர்ஸ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிட்டியமையினால் கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள் என தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி, ஆரோக்கியம், அன்பு மற்றும் சமாதானம் நிறைந்த நத்தார் பண்டிகையாக அமைய பிரார்த்தனை செய்வதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்த 2022ம் ஆண்டு மிகவும் சவால் மிக்கதாக காணப்பட்டது என அவர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நாய்களை தூண்டிவிட்டு 11 பேரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 32 வயதான பெண் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாடக்கப்பட வேண்டியிருப்பதாகவும், சிலர் நாய் கடிக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான முறையில் அனைவரையும் தாக்கிய குறித்த நாயை பொலிஸார் கட்டுப்படுத்த முயற்சித்த போது உயிரிழந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்காவில் திடீரென உருவான குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர். கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும். சில நீர்நிலைகளில் இதனால், பல அடி உயரத்திற்கு அலைகளும் எழுந்து காணப்பட்டன. குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன.Read More →

Reading Time: < 1 minute றொரன்டோவின் முன்னணி சிறுவர் மருத்துவமனை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கணனி கட்டமைப்பின் மீது ரான்சம்வெயார் முறையிலான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிக் கிட்ஸ் (Sick Kids) மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த கணனி கட்டமைப்பினை சீர் செய்வதற்கு சில வாரங்கள் வரையில் செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவசர சேவை பிரிவு, நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தாக்குதலினால் பாதிப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் தனிப்பட்டRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தின் மிடில்செக்ஸ் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வாகமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் Coquitlam பகுதியில் இருந்து மாயமான 22 வயது இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளதுடன், மாயமான Zailey Smith என்பவர் தான் சடலமாக மீட்கப்பட்டவர் என்பதையும் தெரிவித்துள்ளனர். 22 வயதான Zailey Smith மாயமானதாக கூறி, பொதுமக்களின் உதவியை நாடிய 12 மணி நேரத்தில் அவரது சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் எவ்வாறுRead More →

Reading Time: < 1 minute அல்பர்ட்டாவின் சனத்தொகை அதிகரிப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. கடந்த ஜுலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அல்பர்ட்டாவின் சனத்தொகையானது சுமார் 60000 மாக உயர்வடைந்துள்ளது. 1951ம் ஆண்டில் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த மதிப்பீடுகளை செய்து வருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம் அல்பர்ட்டாவின் மொத்த சனத்தொகை 4601314 ஆக உயர்வடைந்துள்ளது. அண்மைக்காலமாக அல்பர்ட்டாவில் கூடுதல் எண்ணிக்கையில் குடியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்பர்ட்டாவில் இவ்வாறு சில காலங்களில் அதிக எண்ணகிக்கையிலானRead More →

Reading Time: < 1 minute அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் பல தசாப்தங்களில் இல்லாத குளிரான கிறிஸ்மஸ் வரக்கூடுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அழிவை ஏற்படுத்தும் வெப்பநிலை வீழ்ச்சியடைவதால் வெறும் தோலில் வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் உறைபனி ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சக்திவாய்ந்த ஆர்க்டிக் குளிர்கால புயல் 135 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வருடத்தின் பரபரப்பான பயண நாட்களுக்கு முன்னதாக வார இறுதி வானிலை எச்சரிக்கைகளின் கீழ் வைத்துள்ளது. எச்சரிக்கைகள் கடற்கரையிலிருந்துRead More →