Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் நாய்களை தூண்டிவிட்டு 11 பேரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயதான பெண் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாடக்கப்பட வேண்டியிருப்பதாகவும், சிலர் நாய் கடிக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆபத்தான முறையில் அனைவரையும் தாக்கிய குறித்த நாயை பொலிஸார் கட்டுப்படுத்த முயற்சித்த போது உயிரிழந்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.




