Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 1450பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 189பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 63,496ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,232ஆக உயர்ந்துள்ளது. மேலும், 31,093பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,171பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் 14 கண்காணிப்பு மையங்களில் 330 வெளிநாட்டுப் பயணிகள், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பயணிகளுக்கு தற்போது தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும், கூட்டாச்சி அரசால் நடத்தப்படும் ஒன்ராறியோவில் உள்ள ட்ரெண்டோன், கோர்ன்வெல் கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், இதில், சீனாவின் வுஹானில் இருந்து நாடு திரும்புள்ளவர்கள், நோய்த் தொற்றுப் பரவலின் போது வந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minute கிரேக்கத்தில் கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தக், கனேடிய ஆயுதப்படைகளுக்கு தாமதமானது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்துள்ளார். கிரேக்கத்தில் இடம்பெற்ற கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தை உறுதிப்படுத்த கனேடிய ஆயுதப்படைகளுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக கால தாமதமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ஜஸ்டினிடம் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது, பொதுமக்களுடன் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு,Read More →

Reading Time: < 1 minute நியூட்டன் ஹைலேண்ட் க்ரீக் பூங்காவில் காணாமல்போன சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) மாலை 5.45 மணியளவில் குடும்பத்துடன் இருந்த சர்ரே சிறுவன், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. குறித்த 14 வயது சிறுவன், நியூட்டனில் உள்ள ஹைலேண்ட் க்ரீக் பூங்காவில் கடைசியாக சைக்கிள் ஓட்டுவதைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பொலிஸாரின் ஹெலிகொப்டரும், சர்ரே தேடல் மற்றும் மீட்பு அணியும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி அங்கு கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 189பேர் உயிரிழந்ததோடு, 1,274பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 62,046பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31,010பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 26,993பேர்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள், மாணவர்களின் நலனுக்காக திட்டமிடப்பட்டபடித் திறக்கப்படும் என கியூபெக் மாகாண முதல்வர் லெகால்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பாடசாலைகள் திறப்பதில் இன்னும் 2 வாரம் நமக்குக் கைவசம் உண்டு. சூழ்நிலையை அனுசரித்தும், தரவுகளை அடிப்படையாகவும் வைத்து நல்ல முடிவை நாம் எடுப்போம். ஆங்கிலப்பாடசாலைகள் எவையும் திறக்கப்படாது என்று கியூஎஸ்பிஏ (QESBA) வாரியம் முடிவெடுக்க முடியாது. அவர்களால் அதை செய்யவும்Read More →

Reading Time: < 1 minute துப்பாக்கி தடை சட்டத்தினை நிறைவேற்ற புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் கியூபெக்கோயிஸ் பிளாக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஒரு வலுவான ஒருமித்த கருத்தை ஏற்படுத்த விரும்புவதால் மட்டுமல்ல, சிறுபான்மை நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது அவசியம். ஆகையால், நாங்கள் சபையில் மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது’ என கூறினார். கனடாவில் இராணுவத் தரத் தாக்குதல் பாணிRead More →

Reading Time: < 1 minute நுனாவுட் பிரதேசவாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சோதனை தவறானது என நுனாவுட் பிரதேச சுகாதார அதிகாரி மருத்துவர் மைக்கேல் பேட்டர்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி பபின் தீவின் மேல் முனையில் உள்ள பாண்ட் இன்லெட் வடக்கு சமுதாயத்தில் இருந்த ஒருவருக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுவே நுனாவுட் பிரதேசத்தில் பதிவான முதல் கொரோனா தொற்று பதிவாக இருந்தது. இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலங்களில் 172பேர் உயிரிழந்துள்ளதோடு, 1298பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன்படி, கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,772ஆகும். மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,854ஆகும். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 30,901பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 26,017பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், வருவாய் குறைந்து வருவதால், பிரிட்டிஷ் கொலம்பியா போவன் தீவின் (Bowen Island) அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும், பொது போக்குவரத்து நிறுவனமான டிரான்ஸ்லிங் இடைநிறுத்தியுள்ளது. போவன் தீவின் பேருந்து வழித்தடங்கள், 280 ஸ்னக் கோவ்-புளூவாட்டர், 281 ஸ்னக் கோவ்-ஈகிள் கிளிஃப், மற்றும் 282 மெட் கார்ட்னர்-ஸ்னக் கோவ் ஆகியவை மே 2ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக டிரான்ஸ்லிங் அறிவித்துள்ளது. இதுகுறித்து டிரான்ஸ்லிங் வெளியிட்டுள்ளRead More →

Reading Time: < 1 minute மனநல சுகாதாரம் மற்றும் பிற மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவிடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில், ‘இந்த நிதி மனநலப் பராமரிப்பு மற்றும் முதன்மை பராமரிப்புக்கான புதிய தளங்களைRead More →

Reading Time: < 1 minute எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்குவதன் மூலம் தாக்குதல் ரக துப்பாக்கித் தடையை மேலும் வலுப்படுத்தலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். எனினும், இத்தகைய நடவடிக்கைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அறிவிப்பு எதனையும் அவர் வெளியிடவில்லை. இந்த துப்பாக்கி தடைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. அதற்குப் பதிலாக, கனடா அரச இதழில் விதிமுறைகளின்படி வெளியிடப்பட்டது. கனடாவில் இராணுவத் தரத் தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசுRead More →