Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 1450பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 189பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 63,496ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,232ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 31,093பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,171பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




