Reading Time: < 1 minute

கனடிய அரசாங்கம், உக்ரைனுக்கு 35 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம், இராணுவ உபகரணங்களை வழங்கவும், பயிற்சிகளை வழங்கவும் உதவி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் உக்ரைனுக்கான உதவிகள் குறித்து அறிவித்துள்ளார்.

ரஸ்யாவுடனான போருக்காக இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாகவும், பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய படகுகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தாக்குதல் விமானங்களை இயக்குவதற்கு உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் கனடிய பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.