Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வின்னிபெக்கில் உள்ள தேசிய மருத்துவ ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், 40 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குள் இந்த வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இந்த நேரத்தில் குறைவாகவே உள்ளதாக மாகாண சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

வான்கூவர் பகுதியில் வசிக்கும் குறித்த நபர், ஒரு வணிக பயணத்திற்காக மத்திய சீன நகரமான வுஹானுக்கு சென்று வந்த நிலையிலேயே அவருக்கு இத்தொற்றுக்கு அவர் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உறுதிப்படுத்தப்பட்ட மூன்றாவது வைரஸ் தொற்று இதுவாகும். இதற்கு முன்னதாக ஒன்ராறியோவில் மேலும் இரண்டு பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.