Reading Time: < 1 minute

கனடாவில், 16 வயது சிறுவனை வாகனத்தில் மோதிக் கொன்றதாக 24 வயதான சாரதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் வோகன் பகுதியின் மார்டீன் க்ரோவ் மற்றும் ஜெக்மென் கிரசன்ட் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மினி பைக் ஒன்றும் வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் மோதுண்ட சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியமை, விபத்தின் பின்னர் வாகனத்தை நிறுத்தாது சென்றமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வோகனைச் சேர்ந்த ஹார்நூர் சவ்ஹான் என்ற 24 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.