Reading Time: < 1 minute

கனேடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பாம்பு உள்ளிட்ட ஊர்வன வகைகளை கடத்தியதாக இந்த கனேடியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதி ராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மலைப்பாம்பு, அமெரிக்க பல்லி உள்ளிட்ட சில வகை ஊர்னவற்றை இவ்வாறு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கனேடியரும் மேலும் இரண்டு பேரும் சேர்ந்து இந்த கடத்தல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 5.13 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஊர்வன இவ்வாறு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.