Reading Time: < 1 minute

தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் பற்றிய தகவல்களை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுத்தப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

விமானம் தாமதமான காரணத்தினால் மணப்பெண் விமான நிலையத்திலேயே உறங்க நேரிட்டதுடன், நிகழ்வில் பங்கேற்க முடியாது போயுள்ளது.

றொரன்டோவிலிருந்து பொனிக்ஸ் நோக்கிப் பயணிக்க வேண்டிய விமானம் இவ்வாறு தாமதமாகியுள்ளது.

முன்னதாக விமானம் தாமதமாக பயணம் செய்யும் என அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் விமானப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை விமான சேவை நிறுவனம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டோர்ர் அபுசாயிட் என்ற மணப்பெண்ணே இவ்வாறு தனது திருமணத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாது பாதிக்கப்பட்டவராவார்.

இதேவேளை, விமான பணியாளர் ஒருவருக்கு அவசர மருத்துவ தேவை ஏற்பட்ட காரணத்தினால் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

திட்டமிட்டிருந்ததனை விடவும் 14 மணித்தியாலங்கள் தாமதமாகவே பயண இலக்கினை சென்றடைந்ததாக அபுசாயிட் தெரிவித்துள்ளார்.